Thenilgiris

News May 21, 2024

உதகை மலர் கண்காட்சி மேலும் 6 நாள்கள் நீட்டிப்பு

image

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 11 நாள் மலர் கண்காட்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் நிறைவு நாளில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மலர் கண்காட்சி இன்றுமுதல் மே 26ஆம் தேதிவரை 6 நாள்கள் நடைபெறும் என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மலர்காட்சி நுழைவு கட்டணம் ஏற்கெனவே நிர்ணயம் செய்தவாறு பெரியவர்களுக்கு ரூ.125, சிறுவர்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

News May 21, 2024

நீலகிரி: கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு

image

நீலகிரி மாவட்டம் அரசு கலை கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க நேற்று (மே 20) கடைசி நாள் என ஊட்டி கல்லூரி முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பம் அனுப்புவதற்கான கால அவகாசம் மே 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து நாளையும் ரத்து

image

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ஹில்குரோவ், அடர்லி இடையே 17 ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையில் மலை ரெயில்  பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன.  அதனால் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி முடிய குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கனத்த மழை தொடர்ந்து பெய்துவருவதால் நாளை 21 ஆம் தேதி மலை ரயில் சேவை ரத்து செய்வதாக சேலம் கோட்டம் ரயில்வே தெரிவித்துள்ளது.

News May 20, 2024

நீலகிரி : நாளை மழைக்கு வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

நீலகிரி மாவட்ட நீதிபதிக்கு பிரிவு உபச்சார விழா

image

நீலகிரி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் , மாவட்ட நீதிபதி ஆர். ஸ்ரீதரன்  பணியிட மாறுதலாகி செல்கிறார். அதை முன்னிட்டு உதகையில் ஒரு தனியார் ஹோட்டல் அரங்கில் நீலகிரி விடியல் தன்னார்வ அமைப்பு சார்பில் நீதிபதி ஆர்.ஸ்ரீதருக்கு பிரிவு உபச்சார விழா இன்று நடைபெற்றது . மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனர் தலைவர்  தமிழ் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நீதிபதி ஸ்ரீதருக்கு பொன்னாடை அணிவித்து
கெளரவிக்கப்பட்டார்.

News May 20, 2024

நீலகிரி: கனமழைக்கு வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

நீலகிரியில் இன்று கடைசி நாள்

image

உதகை அரசு கலை கல்லூரி முதல்வர் ராமலட்சுமி தெரிவித்த தகவல்: உதகை அரசு கலை கல்லூரியில் 18 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. 2024-25ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை பட்ட படிப்புகளில் சேர www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க இன்று (மே 20) கடைசி நாளாகும். வரும் 24ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் மற்றும் தற்காலிக தேர்வு பட்டியல் கல்லூரி இணையதளமான tngacooty.ac.inஇல் வெளியிடப்படும்.

News May 20, 2024

நீலகிரி: இயற்கைக்கு மனிதனே எதிரி

image

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் கட்டுமான பணி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதனால் இயற்கை அளிக்கப்படுவதால் யானை உட்பட வன விலங்குகளின் வழித்தடங்கள் அழிப்பு, மின் வேலிகள் போன்றவற்றால் நீலகிரி
உயிர்ச்சூழல் மண்டலத்தின் இயல்பு மாறுகிறது. நீர் ஆதாரங்கள் நிறைந்த கூடலுார் பந்தலூரில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குடிநீருக்கே அல்லாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

News May 20, 2024

நீலகிரியில் 3 மாநில போக்குவரத்து பாதிப்பு

image

கூடலூர் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலை நடுவட்டம் அருகே பழமையான முனீஸ்வரன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள பழமையான மரம் ஒன்று ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாய்ந்தது. அதில் கோவிலில் இருந்த சிமென்ட் குதிரையும் சேதமடைந்தது. இதனால் கூடலூர் கேரளா கர்நாடகா சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News May 20, 2024

நீலகிரியில் மேலும் 3 நாட்களுக்கு நீடிப்பு

image

நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்றுவரும் 19வது ரோஜா கண்காட்சி நேற்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியால் மேலும் 3 நாட்களுக்கு ரோஜா கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!