India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பைன்சோலையை ஒட்டி காமராஜர் சாகர் அணை உள்ளது. பைன்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தடுப்புவேலியை தாண்டி அணை அருகே சென்று செல்பி மற்றும் போட்டோ எடுத்து வருகின்றனர். அத்துமீறலால் உயிர் பலி அபாயம் உள்ளது. பாதுகாப்பு பணியில் உள்ள வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக புகழ்பெற்ற கோடை விழாவுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா களைகட்டி வருவது வழக்கம். இந்த நிலையில்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடப்பாண்டு 64வது
பழக் கண்காட்சி மே 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகின்றன. சுற்றுலா பயணிகளை வரவேற்க சிறிய அளவிலான பேனர்களை தோட்டக்கலை துறையினர் வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டம் அரவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) 10ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 156 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அனைவரும் மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த, இந்து அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் (50) தங்கி இருந்தார். இந்த விடுதிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். பின்னர் அவர் தங்கி இருந்த அறையை சல்லடை போட்டு தேடி வருகின்றனர். மேலும் ஆய்வாளர் பாஸ்கரிடம் தற்போது துருவி, துருவி விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் பெய்த கன மழையால் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் சாய்ந்து, மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் குன்னூர் மலை ரயில் பாதையிலும் மண் சரிந்து பாறை உருண்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் 4 நாட்களாக நிறுத்தி வைத்திருந்த ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியதால் பயணிகள் பரவசம் அடைந்தனர்.
உல்லத்தி ஊராட்சி அழகர்மலை கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமத்தில் நடைபாதை உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இந்நிலையில் கிராமத்தில் மூர்த்தி என்பவர் இறந்துள்ளார். பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை நேற்று உறவினர்கள் மூங்கில் தொட்டில் கட்டி ஒருவர்பின் ஒருவராக நகர்ந்து கடந்து மயானத்திற்கு கொண்டு சென்றனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பந்தலூர், தேவாலா திருமண மண்டபத்தில். தேவாலா வணிகர் நல சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தேவாலா வணிகர் நலச்சங்க தலைவராக ஷாகீர் உசேன், செயலாளராக சசிகுமார், பொருளாளராக உம்மர் உள்பட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளர் அப்துல் ரசாக், புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
கூடலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் கேரளா நோக்கி செல்லும்பாண்டியாறு-புன்னம்புழா ஆறுகளில் கலப்பதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு துறை ஒருங்கிணைந்து மீட்பு பணியினை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அங்கு செல்லக் கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 11 நாள் மலர் கண்காட்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் நிறைவு நாளில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மலர் கண்காட்சி இன்றுமுதல் மே 26ஆம் தேதிவரை 6 நாள்கள் நடைபெறும் என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மலர்காட்சி நுழைவு கட்டணம் ஏற்கெனவே நிர்ணயம் செய்தவாறு பெரியவர்களுக்கு ரூ.125, சிறுவர்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.