Thenilgiris

News May 27, 2024

நீலகிரி அழகிய லாம்ப் பாறை!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாம்ப் ராக் என்றழைக்கப்படும் ஆட்டுக்குட்டி பாறை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். இந்த இடம் குன்னூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடம் முழுவதும் தேயிலை தோட்டங்கள் மற்றும் காபி எஸ்டேட்டுகளும் அமைந்துள்ளது. அழகிய புகைப்படம் எடுக்க சிறந்த இடமாக இருக்கிறது. மேலும் பாறையின் மேல் இருந்து பார்க்கையில் மலைகளை ஊடுருவும் மேகங்களை காணும்போது இயற்கை விந்தை புரியும்.

News May 27, 2024

உதகை மலர் கண்காட்சி 2.50 இலட்சம் பேர் பார்வை

image

நீலகிரி மாவட்டம் உதகை சீசனை முன்னிட்டு  அரசு தாவரவியல் பூங்காவில்  நடைபெற்ற 16 நாள் மலர் கண் காட்சியை  2.50 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். 13  நாள் ரோஜா கண்காட்சியை  1.10 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற 3 நாள் பழக்கண்காட்சியை 20 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இந்த விழாக்களுடன் நீலகிரி கோடை விழா முடிவடைந்தது.

News May 27, 2024

நீலகிரியில் சிக்கியது சிறுத்தை

image

கூடலூர் அருகே சேமுண்டி கிராமத்தைச் சேர்ந்த பாபச்சன் என்பவரது தோட்ட வீட்டில் சிறுத்தை ஒன்று நுழைந்தது. இதைப் பார்த்தவர்கள் வீட்டின் கதவை வெளியே தாழிட்டுவிட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறை மருத்துவர் ராஜேஷ்குமார் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மயக்கம் அடையச் செய்தார். பின்னர் நேற்று வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு வாகனத்தில் முதுமலை காப்பகம் வனப்பகுதியில் விடுவித்தனர்.

News May 26, 2024

நீலகிரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

கோத்தகிரியில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆண்டுக்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ள பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவ, மாணவிகள் www.tnscert.org என்ற இணையதளத்தில் மே 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 26, 2024

பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த அதிமுக நிர்வாகி

image

குன்னூர் பேருந்து நிலையம் அருகில் செயல்படும் அன்னலட்சுமி டீக்கடையில் தவறவிட்ட ரூபாய் 26,100 ஐ கடையின் உரிமையாளர் அதிமுக நிர்வாகி எல். மணி அவர்கள் எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் டீக்கடையில் பணத்தை தவறவிட்ட பாரதி நகரை சேர்ந்த சேகர் என்பவரிடம் காவல்துறையினர் பணத்தை ஒப்படைத்தனர். எல்.மணி அதிமுக Ex பால்வள தலைவராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 26, 2024

நீலகிரி அருகே தீ விபத்து; நாசம்

image

பெங்களூரூவில் இருந்து, குன்னுார் எம்.ஆர்.சி., ராணுவ மையத்திற்கு வீட்டு பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, ஊட்டி அரசு மருத்துவமனை சாலையில் தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின் கம்பியில் உரசி, திடீரென தீப்பிடித்து எரிந்தது.சம்பவ பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து பொருட்களை மீட்டனர். இருப்பினும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

News May 26, 2024

நீலகிரி அருகே அசத்திய தோட்டக்கலை துறை

image

குன்னுார் சிம்ஸ் பூங்காவில் துவங்கிய 64வது பழக்கண்காட்சியில் 10 மாவட்டங்களின் பல்வேறு வடிவமைப்புகள் அதில் கன்னியாகுமரி தேனீ கிருஷ்ணகிரி புஜ்ஜி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை நாமக்கல் டிராகன் கரூரின் அன்னப்பறவை கடலுார் கலங்கரை விளக்கம் மதுரை மரவன் பட்டாம்பூச்சி திருச்சி பாண்டா பெரம்பலூர்.இந்தியா கேட் ஆகியவை இடம் பெற்றுள்ளன.வடிவமைப்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

News May 25, 2024

கூடலூர்: வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை

image

கூடலூர் கம்மாத்தி சேமுண்டி பகுதியில் பாபச்சன் என்பவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் இன்று சிறுத்தை புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

News May 25, 2024

குத்துச்சண்டை போட்டியில் நீலகிரி மாணவர்கள் சாதனை

image

மாநில அளவிலான டாக்டர் அம்பேத்கர் நினைவு கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்த 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் நீலகிரி மாவட்டத்திலிருந்து கலந்துகொண்ட மாணவ மாணவிகள் 3 தங்கப்பதக்கம், 8 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

News May 25, 2024

சுற்றுலா பயணிகளுக்கு மலர் நாற்று வழங்கிய கலெக்டர்

image

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 64வது பழக்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மு.அருணா நேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, சுற்றுலா பயணிகளுக்கு மலர் நாற்றுகளை வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் இருந்தனர்.

error: Content is protected !!