Thenilgiris

News June 1, 2024

நீலகிரி பீரிமியர் கால்பந்து போட்டிகள் தொடக்கம்

image

நீலகிரி கால்பந்து கழகத்தில் மொத்தம் 44 கால் பந்து அணிகள் பதிவு செய்துள்ளன. இந்த அணிகள்-3 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் விளையாடி வருகின்றன. நடப்பாண்டுக்கான நீலகிரி பீரிமியர் லீக் (என்.பி.எல்) போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று துவங்கின.
இந்த போட்டியில் கோத்தகிரி, ஊட்டி, கூடலூர், பிதர்காடு, ஒரசோலை, ஜெகதளா, எல்ல நல்லி, கேத்தி உள்பட பல்வேறு 11 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

News June 1, 2024

நீலகிரியில் மலை காய்கறி விதைப்பு பணி தீவிரம்

image

நீலகிரியில் கடந்த ஆண்டு முழுவதும் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளின் விளைச்சல் குறைந்தது. இந்நிலையில் தற்போது மழை பெய்துவரும் நிலையில் விளைநிலங்களை தயார் செய்து, கேரட் உள்ளிட்ட மலை காய்கறியின் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News May 31, 2024

இ-பாஸ் மேலும் ஒருமாதம் நீட்டிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனில் அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. இந்நிலையில்
உயர்நீதிமன்ற உத்தரவுபடி நீலகிரியில் நுழைய
இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை செயலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, ஜூன் 30 வரை மாவட்டத்திற்கு வரும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்கள் இ-பாஸ் பெற்றே வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 31, 2024

நீலகிரி: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

பைக்காரா நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

image

உதகை, நடுவட்டம் அருகே பைக்காரா உள்ளது. அங்குள்ள படகு இல்லம் சாலை பராமரிப்பு பணிகளுக்கு மூடப்பட்டு உள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து 2 கி.மீ தூரம் நடந்து சென்று தாழ்வான பாறைகளின் வழியாக செல்லும் நீர் வீழ்ச்சியில் பெருக்கெடுத்து வெள்ளம் ஓடுவதை பார்வையிட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சி பகுதியில் ஷெல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

News May 31, 2024

ஊட்டி மலை ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு!

image

ஊட்டியிலிருந்து நேற்று(மே 30) குன்னூர் நோக்கி சென்ற மலை ரயில், ‘பர்ன் ஹில்’ பகுதியில் சென்றபோது இளைஞர் ஒருவர் மீது ரயில் மோதியது. இதை கவனித்த எஞ்சின் டிரைவர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில், எஸ்ஐ ராமன் ஆய்வில் இறங்கினார். அதில், ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த இளைஞர் 35 வயது மதிக்கத்தக்கவர் என தெரிந்தது. அவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 30, 2024

ஊட்டியில் சுற்று சூழலுக்கான ஓவிய போட்டி

image

உலக சுற்று சூழல் தினத்தை கொண்டாடும் வகையில், நீலகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “புவி வெப்பமயமாதல் மற்றும் பசுமை இல்ல விளைவு” என்ற தலைப்பில், ஊட்டி நீதிமன்ற வளாகத்தில் வரும் (4.6.24) காலை 10 மணி அளவில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. முதலில் பதிவு செய்யும் 30 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். தொலைபேசி: 0423-2444277, 94888 25698, 90922 22202 அணுகவும்.

News May 30, 2024

இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பலி

image

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் ஒட்ட மெத்தை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவர் மாவட்ட குற்ற பதிவேடு ஆவன கூடத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இன்று ஊட்டி ஹில்பங்க் பகுதியில் டீ குடித்து நின்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து அதே இடத்தில் பலியானார். ஊட்டி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் நாளை (மே 31) ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 30, 2024

மழை சேதம்: தொலைபேசி எண்கள் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மு.அருணா தகவல்: நீலகிரியில் மழை சேதம் மற்றும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக மாவட்ட  கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் 1077 மற்றும் 0423 2450034, 2450035 ஆகிய எண்களை தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம். உதகை கோட்டம் 0423 2442433, குன்னூர் கோட்டம் 0423 2206002, கூடலூர் கோட்டம் 04262 261252 ஆகிய எண்களுடன் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பேரிடர் தகவல்களை தெரிவிக்கலாம்.

News May 30, 2024

நீலகிரி டால்பின் மூக்கு சிறப்பு!

image

டால்பின் மூக்கு என்பது குன்னூரிலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள ஒரு காட்சி முனை (வியூ பாயிண்ட்) ஆகும். இந்த முனை, ஒரே பெரிய பாறையின் மேல் டால்பின் மூக்கின் போல் அமைந்துள்ளதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து பார்க்கும்போது மலைகளின் பரவலான காட்சியையும், பல மீட்டர் உயரத்தில் இருந்து விழும் கேத்தரின் அருவியையும் காணலாம். அடுக்கடுக்கான தேயிலை தோட்டங்களையும், வளைவு நெளிவான சாலைகளையும் காணமுடியும்.

error: Content is protected !!