India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் மொத்தம் 70.93% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வனும், பாஜக சார்பில் எல்.முருகனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
குன்னூர் தேயிலை ஏல மையம் மற்றும் இன்கோ சர்வ் மையத்தில் வாரந்தோறும் ஏலம் விடப்படுகிறது. தேயிலை தூளுக்கு கிடைக்கும் விலையின் அடிப்படையில் மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தேயிலை வாரியம் சார்பில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு கிலோ 16.22 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என இயக்குநர் முத்துகுமார் அறிவித்துள்ளார்.
நீலகிரியில் ஒரு சட்டசபை தொகுதிக்கு 14 டேபிள்கள் வீதம் மொத்தம் 84 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன தபால் ஓட்டுகள் எண்ணுவதற்காக கூடுதலாக 7 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. 107 பவானிசாகர் (தனி) தொகுதி 22 சுற்று 108 ஊட்டி தொகுதி 18 சுற்று 109 கூடலுார் (தனி) தொகுதி 16 சுற்று 110 குன்னுார் தொகுதி 17 சுற்று 111 மேட்டுப்பாளையம் தொகுதி 23 சுற்று; 112 அவிநாசி (தனி) தொகுதி 23 சுற்றுகளில் ஓட்டு எண்ணப்படுகிறது.
கூடலூர் கோக்கால் பகுதியில் நேற்று தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று காலில் காயத்துடன் உலா வருவதை அப்பகுதியினர் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கூடலூர் வனத்துறையினர் அங்கு சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்து பாறை அருகே காயங்களுடன் சிறுத்தை இறந்து கிடந்தது. வனத்துறையினர் முன்னிலையில் அதன் உடலை முதுமலை கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தேவாங்கர் கல்யாண மண்டபத்தில், வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் பாஜக முகவர்களுக்கு, விதிமுறை விளக்க ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 3) நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சரும், நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார்.
அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதியில் வெளியிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப ஆலை வீசி வந்த நிலையில், நீலகிரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
உதகையில் காலை 11 மணி முதல் பரவலாக பெய்த மழை, மதியம் திடீரென்று இரண்டு மணி நேரம் விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் உதகையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே காவல் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்து எவ்விதப் பணிகளை செய்ய முடியாமல் காவலர்கள் தத்தளித்தனர். உதகை ரயில்வே காவல் நிலையத்தில் உள்ள பொருட்கள் தண்ணீரில் மூழ்கியது.
கூடலூர் வன கோட்டத்தில் மனித விலங்கு மோதல் ஏற்படுவதை தடுக்க, தினசரி மாலை மற்றும் இரவு நேரங்களில் யானை நடமாடும் பகுதிகள் மற்றும் அவை முகாமிட்டுள்ள இடங்களில் வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக பிதர்காடு பகுதியில் யானை முகாமிட்டு உள்ளதால் வனத்துறையினரும் அங்கு முகாமிட்டு எச்சரித்து வருகின்றனர்.
ஊட்டி நீதிமன்ற வளாக அரங்கில் நடக்கும், ‘புவி வெப்பமயம் ஆதல் மற்றும் பசுமை இல்லம் விளைவு’ என்ற தலைப்பில் வரும் 4ஆம் தேதி அன்று நடக்கும் ஓவிய போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள், எழுது பொருட்கள், ஓவியத்தாள், அடையாள அட்டை போன்றவற்றை கொண்டு வர வேண்டும். ஓவியம் எழுதும்போது செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி கால்பந்து கழகத்தில் மொத்தம் 44 கால் பந்து அணிகள் பதிவு செய்துள்ளன. இந்த அணிகள்-3 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் விளையாடி வருகின்றன. நடப்பாண்டுக்கான நீலகிரி பீரிமியர் லீக் (என்.பி.எல்) போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று துவங்கின.
இந்த போட்டியில் கோத்தகிரி, ஊட்டி, கூடலூர், பிதர்காடு, ஒரசோலை, ஜெகதளா, எல்ல நல்லி, கேத்தி உள்பட பல்வேறு 11 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
Sorry, no posts matched your criteria.