India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 15 ஆவது சுற்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஆ.இராசா (திமுக) 3,43,337 வாக்குகள் பெற்றார். எல்.முருகன் (பாஜக) 1,79,735, லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக) 1,60,154 , ஜெயக்குமார் (நாதக ) 4,31,78 , நோட்டா 9873. 9 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஆ/ராசா 1,63,602 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆ. இராசா ( திமுக ) 2,39,370 வாக்குகள் பெற்றார்.எல்.முருகன் ( பாஜக) 1,22, 213, ஜெயக்குமார் ( நாதக ) 27318 , நோட்டா 6529 பதிவாகியுள்ளது. 9வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஆ ராசா 117157 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் மத்தியமைச்சர் எல் முருகன் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 9வது சுற்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆ.இராசா (திமுக) 2,39,320 வாக்குகள் பெற்றார்.எல்.முருகன் (பாஜக) 1,22,213, லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக) 1,04,202, ஜெயக்குமார் (நாதக) 27,318 வாக்குகள் பெற்றுள்ளனர். 9வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஆ ராசா 1,17,107 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் 1,46,760 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் எல்.முருகன் 81,341 வாக்குகள் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் லோகேஸ் தமிழ்செல்வன் 69,824 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தில் உள்ளார். 68,800 வாக்குகள் பெற்று அசுர வேகத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை பெற்று வருகிறார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் ஏழு சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. அதன்படி, திமுக 70,271 வாக்குகளுடன் வெற்றி முகத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பாஜக 41,418, அதிமுக 29,990, நாம் தமிழர் 5,802 வாக்குகள் பெற்றுள்ளன.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் நான்கு சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. அதன்படி, திமுக 41,187 வாக்குகளுடன் ஏறுமுகத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பாஜக 23,888, அதிமுக 16,190, நாம் தமிழர் 2,670 வாக்குகள் பெற்றுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வாக்கு மின்னணு இயந்திரம் சரியாக 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கப்படும் என தெரிவித்திருந்தது. தற்போது இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான குன்னூர், ஊட்டி, கூடலூர் மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி ஆகிய 6 தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேதைகளில் அடுக்கப்பட்டு வாக்குகள் என்ன துவங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொது தேர்தலில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காலை முதலே விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தபால் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை வகித்து வருகிறார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த நிலையில் தற்போது நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் முகவர்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேலையில் இன்று சரியாக காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சிறிது நேரம் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
Sorry, no posts matched your criteria.