Thenilgiris

News June 5, 2024

நீலகிரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 5, 2024

நீலகிரி தொகுதி தேர்தல் முடிவு!

image

2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் ஆ.ராசா – 4,73,212 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் எல்.முருகன் – 2,32,627 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் – 2,20,230 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ஆ.ஜெயகுமார் – 58,821 வாக்குகள்

News June 5, 2024

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஆ.ராசா

image

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது தமிழக முதல்வரின் அயராத உழைப்பும் மற்றும் மக்கள் பணியின் மூலம் கிடைத்த வெற்றி. மேலும் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

News June 5, 2024

நீலகிரியில் கனமழை 

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாளாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழை விவசாய நிலங்களுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மழை பெய்தது. இந்த மழையால் நகரின் பல இடங்களில் வாகனங்கள் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. குளிரான காலநிலையால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாயினர். இதே காலநிலை தொடரும்பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

News June 5, 2024

உதகையில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி

image

உதகையில் அரசு தாவரவியல் பூங்காவுக்கு அடுத்து அதிக சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக படகு இல்லம் விளங்குகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்  இயக்கும் மோட்டார் படகுகள், அலங்கார பெடல் படகுகள் மற்று துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்கின்றனர். அதன்படி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 லட்சத்து 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என்று படகு இல்லம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 5, 2024

நீலகிரியில் நோட்டாவில் பதிவான வாக்குகள் விவரம்

image

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக, நாதக, என பல்வேறு மாநில, தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் களம் கண்டதுடன் சுயேச்சையாக 12 வேட்பாளர்களும் களம் கண்டனர். இதில் திமுகவின் ஆ.ராசா வெற்றிபெற்றார். யாருடைய கவனத்தையும் பெறாத நோட்டா சத்தமில்லாமல் 13,000 வாக்குகள் பெற்று அனைத்து சுயேச்சைகளையும் முந்தியது. 

News June 5, 2024

நீலகிரி: ஆ.இராசாவுக்கு வெற்றிச் சான்றிதழ்

image

நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 4,73, 212 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் எல்.முருகனை 2,40,585, வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். வாக்கு விவரம்: ஆ.இராசா 4,73,212, எல்.முருகன் 2,32,627, லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக) 2,20,230 வாக்குகள் பெற்றனர். நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் மு.அருணா ஆ.இராசாவுக்கு தேர்தல் வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.

News June 4, 2024

தேர்தல் வெற்றிக்கான சான்றிதழ் பெற்றார் ஆ.ராசா

image

நீலகிரி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து முன்னணி வகித்து வந்த திமுக வேட்பாளர் ஆ.ராசா கடைசி சுற்று முடிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அருணா, ஆ.ராசாவிடம் வழங்கினார்.

News June 4, 2024

நீலகிரியில் திமுக வெற்றி!

image

2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா இதுவரை 4,58,916 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன் 2,25,715 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 2,13,098 வாக்குகளும், நாதக வேட்பாளர் ஆ.ஜெயகுமார் 56,744 பெற்று தோல்வியைத் தழுவினர்.

error: Content is protected !!