India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி படகு இல்ல ஏரி கரையில் பொதுப்பணி துறை சார்பாக, அங்கு தேங்கும் குப்பைகளை எடுப்பதற்காக, 10 ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்ட நிலையில், மழை காலங்களில் அதிகரிக்கும் குப்பைகளை அள்ள முடியாமல் கஷ்டப்பட்டனர். அதனால் அங்கு தற்போது தானியங்கி குப்பை அள்ளும் எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர் பணிச்சுமை சற்று குறைந்து உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதியில் 10 செ.மீட்டரும், உதகைமண்டலத்தில் 6 செ.மீட்டரும், கில் கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 2 செ,மீட்டரும், மேல் பவானி, அவலாஞ்சி, வுட் பிரையார் எஸ்டேட், கூடலூர் பஜார், சாம்ராஜ் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இன்று 6.7.2024 (இரவு7 மணி வரை) நீலகிரி மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பழங்குடியின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் கல்லுாரி விடுதிகளில் பட்டபடிப்பு பட்ட மேற்படிப்பு ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் அரசு விடுதிகளில் சேர தகுதி உடையவர்கள்.
கூடலூர், தேவர்சோலை, பொன்வயல் கிராமம் சுனில் என்பவரது வீடு அருகே சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் கவச உடை அணிந்து 3வது நாளாக நேற்று தேடினார்கள். இதற்கிடையில் இளைஞர் ஒருவர் சிறுத்தை அருகே சென்று செல்பி வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதியில் 8 செ.மீட்டரும், விண்ட் வொர்த் எஸ்டேட் பகுதியில் 3 செ.மீட்டரும், கோத்தகிரி, சாம்ராஜ் எஸ்டேட், குந்தா பாலம் ஆகிய பகுதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
சமீபகாலமாக கூடலூர் பந்தலூர் பகுதிகளில் அடிக்கடி கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் அனுமதி இன்றி சாலையோரங்களில் மனிதக் கழிவுகளை கொட்டி செல்கின்றது என்று Way2Newsஇல் செய்தி பதிவிட்டு இருந்தோம். இந்த நிலையில் நேற்று அனுமதியின்றி இயக்கிய கழிவுநீர் வாகனத்தை சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தினர் பிடித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், உரிமையாளரிடம் பத்திரப்பதிவு தாளில் எழுத்து மூலம் உறுதிமொழியும் பெற்றனர்.
கூடலூர் அருகே செலுக்காடி கிராமத்தில் நேற்று 2 யானைகள் நுழைந்து கிராம சாலைகளில் நடமாடின. அப்போது வளர்ப்பு நாய் ஒன்று குரைத்தவுடன் , நாயை துரத்தி வீட்டை நோக்கி யானைகள் வந்ததால், அப்பகுதி மக்கள் அலறியபடி ஓடினர். பின்னர் தேவன் என்பவரது வீட்டை சேதப்படுத்திச் சென்றது. வனத்துறையினர் அங்கு முகாமிட்டு உள்ளனர்.
நட்சத்திர தொகுதியான நீலகிரியில் களம் கண்டு திமுக வேட்பாளர் ஆ. ராசா வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் இதுவரை திமுக 3 முறையும், காங்கிரஸ் 8 முறையும், அதிமுக மற்றும் பாஜக தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தனி தொகுதியான நீலகிரியில் பாஜக சார்பில் எல். முருகனும், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலு மகன் லோகேஷ் தமிழ்செல்வனும் ஆ. ராசாவை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவினர்.
Sorry, no posts matched your criteria.