Thenilgiris

News June 10, 2024

தற்காப்பு உடைகளுடன் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் ஆவலோடு பள்ளிக்கு சென்றனர். இந்த நிலையில் நீலகிரியில் இன்று காலையில் இதமான காற்றோடு சாரல் மழை பெய்து வருவதால் பள்ளி குழந்தைகள் தற்காப்பு உடைகளை அணிந்து பள்ளிக்கு ஆனந்தமாக துள்ளி குதித்து சென்றனர்.

News June 10, 2024

நீலகிரியில் 37 மையங்களில் தேர்வு

image

நீலகிரி மாவட்டத்தில் TNPSC தேர்வானது ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் 37 மையங்களில் நடந்தது. இத்தேர்வுக்காக, 9,956 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. தேர்வை கண்காணிக்க, 6 நடமாடும் கண்காணிப்பு குழு, 12 பறக்கும் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 37 கண்காணிப்பு கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 7,031 பேர் தேர்வு எழுதினர் 2,925 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

News June 9, 2024

நீலகிரியில் குரூப் 4 தேர்வு எழுதிய 9956 பேர்

image

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தின் சார்பில் நடைபெறும் குரூப் IV தேர்வுக்கு 6 தாலுகாக்களில் 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 9956 பேர் தேர்வு எழுதினார்கள். நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மு.அருணா, உதகை வுட் சைடு பள்ளி மற்றும் சி.எம்.எம் மேல்நிலை பள்ளியில் நடைபெறும் தேர்வை  இன்று பார்வையிட்டார்.

News June 9, 2024

மழையால் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள்

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக கோத்தகிரி-ஊட்டி இடையே பாக்கியா நகர் அருகே மலை சரிவில் நேற்று பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. அந்த பாறையை சாலை ஓரத்திற்கு ஒதுக்கி வைக்கும் வரை சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 9, 2024

நீலகிரி: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் ஜூன் 21 தேதி காலை 11 மணி அளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகள் சம்மந்தமான மனுக்களை  ஜூன்  11 தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்: 72 , உதகை 643001  என்ற அலுவலக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மு .அருணா தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தின் உதவி

image

நீலகிரி, கோத்தகிரி பகுதியை சார்ந்த சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் மற்றும் சிறந்த சமூக சேவகருமான போ.சிவகுமார் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு உதகை முள்ளிகொரை பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தின் மக்களுக்கு மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்களுடன் இனிப்புடன் கூடிய மதிய விருந்தும் வழங்கப்பட்டது.

News June 8, 2024

நீலகிரி: தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்

image

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அப்துல் காதர் அவர்களின் தலைமையில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. காசோலை மோசடி, சொத்து சம்பந்தமான மற்றும் வங்கி, குடும்ப பிரச்சனை சம்பந்தமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு 694 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

News June 8, 2024

நீலகிரியில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

image

2024ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்ட தேர்தல் மாதிரி நடத்தை நெறிமுறைகள் கடந்த 6ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 10ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

ஜூன் 10ஆம் தேதி முதல் துவக்கம்

image

நீலகிரி மாவட்டத்தில் 28 ஆயிரத்து 200 பசு மற்றும் எருமை இனங்களை நோயிலிருந்து காக்கும் வகையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி ஜூன் 10ஆம் தேதி முதல் நடக்க உள்ளது. மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை கொண்டு 29 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

நீலகிரி அருகே திடீர் மண்சரிவு

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்று தீவிரமடைந்தது. இந்த நிலையில் ஊட்டி நகராட்சி 33வது வார்டுக்கு உட்பட்ட கீழ் தலையாட்டிமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு நடைபாதை சேதமடைந்தது. இதனால் பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இரவு நேரத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

error: Content is protected !!