India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதில் இலவசமாக ஒரு குடும்பத்துக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு மே 3ம் தேதி அரசு துவக்கியது. நீலகிரியில் 4.40 லட்சம் கிலோ தேவை என அறிவித்து பெங்களூருவிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டுவருகிறது. தரமற்ற கேழ்வரகு வழங்குவதால் மக்கள் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தரமற்ற கேழ்வரகு ராகி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ராமன் நேற்று நீலகிரியில் செய்தியாளரிடம் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில் நீலகிரி சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் அறிவித்த கையோடு மேடையில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து அதற்கான காசோலையும் வழங்கினார். ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கவில்லை” என்றார்.
நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் தாலுகா நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் காசோலை, வங்கி, குடும்ப பிரச்சனை, தொழிலாளர் நலன், வங்கி வாராக்கடன் என 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 694 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
நீலகிரி பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் இயல்பான அலுவலக பணிகள் மாவட்டம் முழுவதும் செயல்பட துவங்கி உள்ளன. இந்த வகையில் இன்று (ஜூன்11) நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலக வளாகத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி பங்கேற்றார்.
ஊட்டியிலிருந்து பைக்காரா நோக்கி ஜீப் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பைன் பாரஸ்ட் அருகில் முன்னாள் சென்ற பைக்கை முந்தியபோது ஜீப் எதிரில் வந்த கர்நாடக பதிவெண் கொண்ட கார் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஜீப் சாலையில் கவிழ்ந்தது, கார் தலை கீழாக சாலையோரம் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
முதுமலை வரும் பயணிகள் வன விலங்குகள், பறவைகள் மட்டும் அல்லாமல் பட்டாம் பூச்சிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போதைய சீசனில் பச்சை வண்ண பட்டாம் பூச்சிகள் கூட்டம், கூட்டமாக வர தொடங்கி உள்ளன. இந்த பட்டாம் பூச்சிகள் ஈர மண்ணில் உள்ள உப்பு சத்தை உட்கொண்டு, மழை வருவதற்கு முன்பு வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து விடுகின்றன.
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்களும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் வெள்ள நீர் செல்ல முடியாமல் பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில் இன்று குன்னூர் பேருந்து நிலையத்திற்கு முன்பு உள்ள கடையை ஜேசிபி இயந்திரம் மூலம் நகராட்சி துறையினர் அகற்றினர்.
நீலகிரியில் பசுமைக்கு பஞ்சம் இல்லை என்பதால் கிராமங்களில் கால்நடை வளர்ப்பு அதிகப்படியாக இருந்து வருகிறது. ஆதிவாசி மக்களும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் ஊட்டி உல்லாடா சமுதாய கூடத்தில் கால்நடைகளுக்கான 5ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் நிகழ்வில் மாவட்ட கலெக்டர் அருணா பங்கேற்று இன்று ( ஜூன் 10) தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் ஆவலோடு பள்ளிக்கு சென்றனர். இந்த நிலையில் நீலகிரியில் இன்று காலையில் இதமான காற்றோடு சாரல் மழை பெய்து வருவதால் பள்ளி குழந்தைகள் தற்காப்பு உடைகளை அணிந்து பள்ளிக்கு ஆனந்தமாக துள்ளி குதித்து சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் TNPSC தேர்வானது ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் 37 மையங்களில் நடந்தது. இத்தேர்வுக்காக, 9,956 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. தேர்வை கண்காணிக்க, 6 நடமாடும் கண்காணிப்பு குழு, 12 பறக்கும் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 37 கண்காணிப்பு கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 7,031 பேர் தேர்வு எழுதினர் 2,925 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
Sorry, no posts matched your criteria.