India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி அருகே மேலூர் ஒசஹட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜூ சுற்றுச்சூழல் குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். இதுகுறித்த மாணவ, மாணவியரின் பேரணி நேற்று நடைப்பெற்றது.
கோடை விடுமுறை என்றாலே சுற்றுலா பயணிகள் நினைவுக்கு வருவது நீலகிரி மாவட்டம். இந்த மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலங்களை உள்ளடக்கியது. மே மாதம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். நடப்பாண்டு நீலகிரி சுற்றுலா தலங்களில் போதிய அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்துமிடம், இ-பாஸ் போன்ற செயல்பாட்டால் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை தவிர்த்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் வனப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகில் உள்ள கரிக்கையூர் ஆதிவாசி கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் கோத்தகிரி காவல்துறை சார்பில் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் போக்சோ சட்டம் மற்றும் மாவோயிஸ்ட் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
கடந்த 1999ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்து பணியாற்றிவந்து தற்போது ஏட்டுகளாக உள்ளவர்களுக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி 25 வருடம் நிறைவு பெற்றது. இதை அடுத்து அவர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் உத்தரவு ஆணை வழங்கப்பட்டது. நீலகிரியில் பதவி உயர்வு பெற்ற 26 பேருக்கு இதுவரை ஆணை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
குன்னூர் சாலை காட்டேரி டபுள் போஸ்ட் பகுதியில் உள்ள லாஸ் அருவி அருகே, ஒற்றை கொம்பு யானை ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டு வருகிறது. அது அவ்வப்போது குன்னூர் சாலையை கடந்து செல்கிறது. அப்போது அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் யானை சாலையை கடக்கும் வரை காத்திருந்து செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்பட்டுவரும் நிலையில், சில இடங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தி வருவதாக தெரியவருகிறது. இந்நிலையில் நேற்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நீலகிரி கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.06 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலதிட்ட உதவிகளை கலெக்டர் நேற்று வழங்கினார்.
நீலகிரி: கோடை சீசன் முடிந்தவுடன் பயணிகள் வருகை குறைந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இத்துடன் ஜூன் 15 வரை மலை ரயில் முன்பதிவு செய்து காத்திருப்போர் 6000 பேர் என ரயில்வே தெரிவித்து உள்ளது. ஊட்டி, குன்னூர் ரயில் நிலையங்களில் இன்று பயணிகள் கூட்டம் கூடுதலாக இருந்தது.
நீலகிரியில் மலை காய்கறிகளான பீட்ரூட், கேரட், டெர்னாபஸ், முள்ளங்கி, பட்டாணி, பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைகோஸ், புருகோலி, மேரக்காய் போன்ற காய்கறிகளும் – ஆரஞ்சு, கொய்யா, சீத்தா, பீச்சஸ் உள்ளிட்ட பழ வகைகளும் பயிரிடப்படுகின்றன. இவற்றை விற்கும் கடைகளில் விலைப் பட்டியலை கட்டாயம் வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். இதில் மாவட்ட அளவில் மாவட்டத்திலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த முதன்மை கல்வி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.