India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில நாட்களாக மழையின் தாக்கம் இல்லாத நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் குன்னுார் சேலாஸ் அருகே சோல்ராக் சாலையில் இன்று காலை 8 மணியளவில் மரத்தின் பெரிய கிளை உடைந்து சாலையில் விழுந்தது. இதனால் அரசு பேருந்துகள் உட்பட வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் வருகிற ஜூன் 18, 19ஆம் தேதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய கூட்டம் நடைப்பெறுகிறது. கூட்டத்திற்கு புதுடெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி புருசைந்திர குமார் கவுரவ் தலைமை வகிக்கிறார். இதில் சாட்சியமளிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் பிரமாண பத்திரங்களை (2 நகல்) தாக்கல் செய்து குறுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீலகிரி மாவட்ட சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் எல்.சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மாவட்ட சிஐ டியு செயலாளர் வினோத் பொருளாளர் நவீன் சந்திரன் உள்பட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி, 25 வருடங்கள் பணியாற்றி போலீஸ் ஏட்டுகளாக பணிபுரிந்து வரும் 26 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் (SSI) என்ற பதவி உயர்வு ஆணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் 26 பேர் இன்று (ஜூன் 14) மாவட்ட காவல் அலுவலகத்தில் பதவி ஏற்பதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழக எல்லையான கூடலூர் பகுதியில் வெளிமாநில போதை பொருட்கள் கடத்தல் என்பது அடிக்கடி நடந்து வருகிறது. இந்த வகையில் நேற்று கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட பிஜூ என்பவரிடம் இன்று மேல் விசாரணை நடைபெற்றது. இதில் இவர் ஆந்திரா அனுக்காபள்ளி பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ரூ.74 ஆயிரம் கள்ள நோட்டு பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 19, 20, 21 தேதிகளில் ஜமாபந்தி நடக்கிறது. குந்தாவில் ஆட்சியரும், பந்தலூரில் வருவாய் அலுவலரும், ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய இடங்களில் ஆர்டிஓவும் தலைமை வகிக்கின்றனர். பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு சென்று சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற திமும துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா ஜூன் 16ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அப்போது திமுக சார்பில் குன்னூரில் காலை 11 மணி, உதகையில் பகல் 12 மணி, கூடலூரில் மாலை 4 மணியளவில் ஆ.இராசாவுக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தெரிவித்தார்.
குன்னூர் அருகே அருவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார்(24). இவர் ரோஷினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களது வீட்டில் நுழைந்து ரோஷினியை சிலர் கடத்தி உள்ளனர். புகாரின் பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் கோமதி, கடத்தி சென்ற அவரது தாய் சாந்தி, மாமன் நஞ்சுண்டன் ஆகியோரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஊட்டி அருகே மேலூர் ஒசஹட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜூ சுற்றுச்சூழல் குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். இதுகுறித்த மாணவ, மாணவியரின் பேரணி நேற்று நடைப்பெற்றது.
Sorry, no posts matched your criteria.