India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம், நிலா கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிதிர்காடு அடுத்த பெண்ணை பகுதியில் இன்று இரவு காட்டுநாயக்கன் ( பழங்குடியினர்) பிரிவை சார்ந்த கண்ணன் என்பவரை யானை தாக்கி மரணம் அடைந்தார். இந்த மரணம் குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பல மாதங்களாக இப்பகுதியில் யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உதகை அருகே தலைகுந்தா என்ற இடத்தில் இருந்து கல்லட்டி வழியாக மசினகுடி செல்லும் கல்லட்டி மலை வழி சாலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெறுவதால் ஆங்காங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரில் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஸ்ட்ராபெர்ரி பழம் சீசன் தொடங்கி உள்ளது. நீலகிரி ஸ்ட்ராபெரி பழம் மிகுந்த சுவையாக இருப்பதால் நல்ல கிராக்கி நிலவுகிறது. தற்போது ஸ்ட்ராபெரி பழம் அறுவடை தொடங்கி உள்ளது. வியாபாரிகள் சாகுபடி நிலங்களுக்கு வந்து ஒரு கிலோ
ரூ.300 விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மக்களவை உறுப்பினராக வெற்றிபெற்ற திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா நேற்று கூடலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், 3 முறை வெற்றிபெறச் செய்திருக்கிறீர்கள். என்றும் நான் நன்றி மறக்க மாட்டேன், உங்கள் தொகுதி பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பேன் என்றார். அப்போது தமிழக அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட செயலர் முபாரக் உடனிருந்தனர்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குன்னூர் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க 35வது பொது குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சங்க தலைவர் சு.மனோகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குன்னூர் ரயில்வே கேட் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் செயலாளர் ஆல்துரை மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
உதகையில் இருந்து லவ்டேல் செல்லும் சாலையில் காந்தி நகர் உள்ளது. நேற்று (ஜூன் 15) மாலை 5 மணியளவில் ஒரு கார் லவ்டேல் நோக்கி சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த கார் 50 அடி பள்ளத்தில் உருண்டு தலை கீழாக கவிழ்ந்தது. கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உதகை நகர மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வன சரகத்திற்கு உட்பட்ட புளிம்பாறை கிராமத்தில் உள்ள தனியார் பாக்கு தோப்பில் சிறுத்தை இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு நேற்று தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விரைந்தனர். இதையடுத்து முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உடற்கூறாய்வு செய்தார். இது 5 வயது பெண் சிறுத்தை என்பது தெரிய வந்தது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு துறையில் பணி புரியும் அலுவலர்கள் இ-பாஸ் பணிகளுக்காக சோதனை சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பள்ளி உதவியாளர் மற்றும் லைப்ரரி அலுவலர்களும் அனுப்பி வைக்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 1999ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்து பணியாற்றி, தற்போது தலைமை காவலர்களாக இருப்பவர்கள் 26 வருடங்கள் நிறைவு பெற்று உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர். இதற்காக 26 பேரும் நேற்று உத்திரவு ஆணை பெற்றனர். அவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் வாழ்த்து தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.