India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் விருது வழங்கப்படுகிறது. அதன் படி பெண்கள் தேசிய குழந்தை தினமான ஜனவரி 24ம் நாள் அன்று பாராட்டு பத்திரமும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.தகுதி உடையவர்கள் சம்பந்தப்பட்ட இணையதளத்தை அணுகி பூர்த்தி செய்யலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கர்நாடகா சிக்கால்பூரை சேர்ந்த 16 பேர் சபரிமலை சென்று தரிசனம் முடித்து, அங்கிருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஊட்டி வழியாக கர்நாடகம் நோக்கி கூடலூர் அருகே ஆகாசபாலம் பகுதியில் சென்றபோது, இவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வெங்கடேஷ், சீனிவாஷ், நாகராஜ், நாச்சிமுத்து, ஆதிநாராயணன் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

குன்னுார் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பாதுகாப்பு நடைமுறைகள், போக்குவரத்து மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து விவாதங்கள் நடந்தன. ராணுவ கல்லூரியில் ராணுவ உயர் அதிகாரிகளுடன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா, கூடுதல் கலெக்டர் சங்கீதா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

நீலகிரியில் மாணவி ஒருவரை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரக் கும்பல் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருட்களின் விற்பனையை அரசு நிறுத்த வேண்டும்” என்றார்.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 27ஆம் தேதி வருகை தரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி வருகிறார். இந்நிலையில் அவரது பாதுகாப்பிற்காக நீலகிரி மாவட்டம், கேரளா, கர்நாடகா எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் உட்பட, பர்லியார் மற்றும் கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிறார். 27ம் தேதி கோவையிலிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி வருகிறார். 28ம் தேதி சாலை மார்க்கமாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிலையில் ஜனாதிபதி செல்லும் தாவரவியல் பூங்கா சாலை உட்பட சில பகுதிகளில் நகராட்சி, மாநில, தேசிய நெடுஞ்சாலை துறையினர் ‘பேட்ச்’ பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும்23ஆம் காலை 11 மணியளவில் உள்ளாட்சிகள் தின கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையில் அந்தந்த கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குன்னூர், அருவங்காடு, கேத்தி எள்ளநல்லி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்த விரிவாக்க பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே அகற்றப்படாத மண் குவியல்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இந்த சமயத்தில் நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து கோழி உரம் ஏற்றி வந்த லாரி சேற்றில் சறுக்கி விபத்து ஏற்பட்டது. டிரைவர் கருப்புசாமி சிறு காயத்துடன் தப்பினார்.

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில், நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம், மாவட்ட காவல் துறை அலுவலரால் (21.11.2024) இன்று வெளியிடப்பட்டுள்ளது.

➤ நீலகிரிக்கு குடியரசுத் தலைவர் வருகை ➤ தேயிலை வாரிய கல்வி உதவித்தொகை விண்ணப்பம் நிறுத்தம் ➤ ஊட்டி பூண்டு திடீர் விலை வீழ்ச்சி ➤ ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் வெளி ஆட்கள் நுழைய தடை ➤ விதிமீறி வெட்டப்படும் சில்வர் ஓக் மரங்கள் ➤ கூடலூரில் சாலையை சீரமைத்த ஓட்டுநர்கள் ➤ மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது ➤ தேவாலாவில் சுகாதார துறை கள ஆய்வு ➤ நெடுகுளா பகுதியில் பனி மூட்டம் அதிகரிப்பு
Sorry, no posts matched your criteria.