India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் உதகையை நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடகா அரசு பேருந்தில் இன்று உதகையிலிருந்து கூடலூர் வழியாக சென்ற கேரள மாநில கார் மோதி விபத்து ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கூடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு விசாரணை குழு முன், கோத்தகிரி முன்னாள் பேரூராட்சி தலைவர் வாப்பு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் மிக முக்கிய மலையாக இருப்பது நீலகிரி மலைப்பகுதியாகும். ஆங்கிலேயர் காலத்தில் புல்வெளி காடுகள் அழிக்கப்பட்டு, வெளிநாட்டு மரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. இதனால் காலநிலையும் மாறுபட்டது. இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற வழிகாட்டலின் படி, வெளிநாட்டு மரங்கள் அகற்றப்பட்டு, மீண்டும் புல் வெளி காடுகள் அமைக்க வனத்துறை முடிவு எடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதற்காக சாதனை செய்தவர்கள் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சிறுபான்மையின் நலத் துறையினர் தெரிவித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 20ம் தேதி ஆகும்.

கூடலூர் நகரின் மையப் பகுதியான காந்தித் திடல் பகுதிக்கு கூட்டமாக உலா வந்த காட்டு பன்றிகளால் காலை நடை பயணத்திற்கு வந்த மக்கள் அச்சமடைந்தனர். சமீப காலமாக நகரப் பகுதிக்கு யானை போன்ற விலங்குகள் உலா வருவது அதிகரித்து வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இவை மீண்டும் வராத வகையில் சம்பந்தப்பட்ட துறை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம், மாவட்ட காவல் துறை அலுவலரால் (23.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.

நீலகிரியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில், விதிமீறல் காரணங்களுக்காக சுமார் ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் வாகன ஓட்டுனர்கள் விதி மீறல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமென, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், வழக்குகள் சம்பந்தமான தடயவியல் மற்றும் அறிவியல் ஆய்வு பயிற்சி, காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் இன்று உதகையில் நடைபெற்றது. கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகளில் காவல்துறைக்கு பெரிதும் உதவக்கூடியது தடயவியல் ஆகும். அதற்குரிய ஆய்வு பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலமாக, நீலகிரி மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம், கீர்த்தி சிஎஸ்ஐ தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முகாமினை தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் பி.பார்ம் பட்டம் மற்றும் டி.பார்ம் ஆகிய பட்டம் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் வைக்க www. mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தெரிவித்துள்ளார். மருந்தகம் அமைக்க 110 சதுர அடிக்கு குறையாமல் இடம் கட்டிடமாக இருக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.