Thenilgiris

News November 26, 2024

ஜனாதிபதி வருகை பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்

image

நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளைமறுநாள் வருகை தருகிறார். இவர் வருகையின் போது பாதுகாப்பு பணிக்காக 1000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஐந்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

News November 26, 2024

காட்டெருமை வேட்டை: அதிமுக நிர்வாகி சரண்

image

நீலகிரி, கூடலூர் சில்வர் கிளவுட் எஸ்டேட் அருகே ஏப்ரல் மாதம் காட்டு எருமை வேட்டையாடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வேட்டை நடந்த இடத்தின் உரிமையாளர் அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் அவருக்கு சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கிடைத்தது. ஐகோர்ட் உத்தரவுப்படி, கூடலூர் மாஜிஸ்திரேட் சசின்குமார் முன்னிலையில் நேற்று சஜீவன் சரண் அடைந்தார். 

News November 26, 2024

ட்ரோன் கேமரா பறக்க விட தடை: எஸ்பி நிஷா 

image

நீலகிரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வருவதை ஒட்டி, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ட்ரோன் கேமரா பறக்க விடுவதை தடை செய்யப்பட்டுள்ளதாக, நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

News November 25, 2024

நீலகிரியில் இன்று இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (25.11.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்: உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News November 25, 2024

ஜனாதிபதி வருகை: கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் 

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா மற்றும் மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 25, 2024

உதகை அரசு மருத்துவமனையின் அவல நிலை

image

உதகை அரசு மருத்துவமனையில் யுபிஎஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இன்று எக்ஸ்ரே (XRAY) எடுக்க வந்த நோயாளிகளை நாளை வரும்படி மருத்துவமனை ஊழியர்கள் கூறியதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே, இதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

News November 25, 2024

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சூரிய ஒளியில் இயங்கும் சோலர் பேனல் அமைக்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது எனவும் விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவும் விவசாயிகள் குறை தீர்ப்பு நாளில் நடந்த கூட்டத்தில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார். மேலும் 500 சதுர மீட்டர் அளவிற்கு பசுமை குடில் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

உறைப்பனி சீசன்: முட்டை கோஸ் அறுவடை தீவிரம்

image

உறைப்பனி சீசன் துவங்க உள்ளதால் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஆடா சோலை, தேனோடு கம்பை, பாலடா ஆகிய பகுதியில் வளர்ந்த முட்டை கோஸ் பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். ஊட்டியில் மழைக்காலம் முடிந்து பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. உறைப்பனி காலத்தில் நன்கு விளைந்த முட்டைக்கோஸ் பயிர்கள் சேதம் அடையும் என்பதாலும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதாலும் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர்.

News November 25, 2024

ஊட்டியில் போலீசார் குவிப்பு

image

நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் முறையாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை மறு நாள்(நவ 27) வருகை தரவுள்ளதால், அவர் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட காவல்துறையினர் ஊட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தருகிறது.

News November 25, 2024

நீலகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல்துறை அதிகாரிகள் தலைமையில், நாள்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம், மாவட்ட காவல் துறை அலுவலரால் (24.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!