India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பந்தலூர் தாலுகா அம்மன்காவு கிராமத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (24). இவர் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி கொளப்பள்ளியில் இருந்து நேபாளத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவர் கடந்த 3 மாதங்களில் 11 மாநிலங்கள் வழியாக 5858 கிமீ கடந்து நேற்று லடாக் சென்றடைந்தார். அவருக்கு நீலகிரி மாவட்ட மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக பந்தலூர், கூடலூர் தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு நாள் ஜூன் 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காரணமாக பலரும் உயிரிழந்த நிலையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி குன்னூரில் நடந்தது. பெட்போர்டு பகுதியில் துவங்கிய ஊர்வலத்தை டி.எஸ்.பி., குமார் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்கள் பங்கேற்றனர்.
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 25வது ஏலத்தில் தேயிலை தூள் வரத்து மற்றும் விற்பனை உயர்ந்தது. அதில் மொத்தம் 13.02 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்றது. 14.79 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு 113.60 ரூபாய் என இருந்தது. கடந்த வாரத்தை விட இந்த ஏலத்தில் 2.32 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. இரு வாரங்களை ஒப்பிடுகையில், 5 லட்சம் கிலோ தேயிலை தூள் அதிகமாக வந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். தனியார் டாக்சி ஓட்டுநர்கள் ஊட்டிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் ஊட்டியில் இருந்து கோவை விமான நிலையம் சென்ற வாகன ஓட்டுநர்களை தனியார் நிறுவன டாக்சி ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.
நீலகிரியில் இன்று (ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் தொரப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், முதுமலை துணை இயக்குநர் வித்யா, டிஎப்ஓ வெங்கடேஷ்பிரபு மேற்பார்வையில், நேற்று (ஜூன் 25) காட்டு யானைகளை, கும்கி யானை உதவியுடன் 20 வன ஊழியர்கள் விரட்டினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதியில் வருகின்றன. இதில் குன்னூர் அருகே உள்ள மோர்ஸ் கார்டன் பகுதியில் பகல் நேரத்தில் உலா வந்த சிறுத்தையை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இங்கு சுற்றி தெரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆ.ராசா, நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு 4வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.