Thenilgiris

News November 28, 2024

பாரம்பரிய சால்வையை பெற்றுக் கொண்ட முர்மு

image

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு நீலகிரியில் வாழும் தோடர் இன பழங்குடி மக்களின் பாரம்பரிய பூத்துக்குளி சால்வையை வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. புவிசார் குறியீடு பெற்றுள்ள இந்த சால்வையானது பருத்தியிலான வெண்ணிற ஆடையில் சிவப்பு, கருப்பு நூலால் பூ வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். பூ வேலைப்பாடுகள் கையால் மட்டுமே செய்யப்படுகின்றன.

News November 28, 2024

இராணுவ கல்லூரியில் குடியரசு தலைவர்

image

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ கல்லூரிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்துள்ளார். அங்குள்ள வெலிங்டன் நினைவு தூணிற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தலைவர் வருகையால் இராணுவ கல்லூரி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News November 28, 2024

வயநாடு மாணவர்களுக்கு உதவி

image

கூடலூரில் உள்ள சேவாலயம் அறக்கட்டளை சார்பில், கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, தன்னார்வ அமைப்பின் சார்பில் இலவச சைக்கிள், ‘லேப்டாப்’ வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முரளிதரன் தலைமை வகித்தார். 20 மாணவர்களுக்கு சைக்கிள், மூன்று மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ மற்றும் கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

News November 28, 2024

நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் 

image

தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை தர உள்ளதால் மேட்டுப்பாளையம் குன்னூரிலிருந்து உதகை செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 28, 2024

நீலகிரியில் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் தற்போது பணியாற்றும் வட்டாட்சியர்களை மாற்றி புதிய வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி குன்னூர் – ஜவஹர், உதகை – சங்கர் கணேஷ், கோத்தகிரி – ராஜலட்சுமி, கூடலூர் – முத்துமாரி, பந்தலூர் – சிரஜுண்ணிசா, குந்தா – கோமதி (சமூக நல திட்டங்கள் மட்டும்) போன்றோரை அரசு உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

News November 28, 2024

சுருக்கு கம்பியில் சிக்கி ஆண் புலி சாவு: மூவர் கைது

image

நீலகிரி, கூடலூர் அருகே செலுக்காடி வனப்பகுதியில் 3 வயதுடைய ஆண் புலி இறந்து கிடந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில், சுருக்கு கம்பி கழுத்தில் சிக்கி புலி உயிரிழந்தது தெரிய வந்தது. புலியின் உடலை புலிகள் காப்பக மருத்துவர் உடற்கூராய்வு செய்து எரியூட்டபட்டது. புலிக்கு சுருக்கு வைத்து  கொன்றதாக 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 27, 2024

நீலகிரியில் 10 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

image

கூடலூரில் இன்று ஹாபிடாட் அலையன்ஸ் அறக்கட்டளையின் துவக்க விழா நடைபெற்றது. கூடலூர் MLA பொன் ஜெயசீலன், கூடலூர் நகராட்சி ஆணையர் சுபிதாஶ்ரீ, ராயல் – 1 மருத்துவமனை இயக்குநர் பிரகாஷ் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இந்த அறக்கட்டளை மூலம் நீலகிரியில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக, நிறுவனர் முஜீபு ரஹ்மான் தெரிவித்தார். 

News November 27, 2024

உதகை நகராட்சி புதிய கமிஷனர் ஸ்டான்லி பாபு நியமனம் 

image

தமிழகத்தில் பல்வேறு நகராட்சி கமிஷனர்களை இடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உதகை நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனராக இருந்த ஸ்டான்லி பாபு,  ஊட்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News November 27, 2024

ஊட்டி: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு புதிய பதவி

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் கணக்கில் வராத பணம் ரூ.11.70 லட்சம் பறிமுதல் செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் நகராட்சி கமிஷனர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News November 27, 2024

போர் நினைவுச் சின்னத்தில் நாளை அஞ்சல் செலுத்துகிறார் முர்மு

image

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நாளை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகள் மத்தியில் பேச உள்ளார். அதற்கு முன்பாக ராணுவ கல்லூரிக்கு முன்பாக உள்ள போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

error: Content is protected !!