Thenilgiris

News November 29, 2024

மேட்டுப்பாளையம் – ஊட்டி சிறப்பு மலை ரயில் பயண விபரம்

image

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே டிசம்பர் 25, 27, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறு மார்க்கத்தில் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

News November 29, 2024

நீலகிரி பள்ளி ஆசிரியர்களுக்கு  ஐஐடியில் பயிற்சி

image

அறிவியல் தொடர்பான செயல்பாடுகளை உருவாக்கும் வகையில் சென்னை ஐஐடியில் சிறப்பு பயிற்சி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 46 பள்ளிகள் தேர்வாகியுள்ளன. குறிப்பாக நீலகிரியில் இருந்து 7 பள்ளிகள் தேர்வாகியுள்ளன. பயிற்சியில் ஆசிரியர்களை பங்கேற்க வைக்க பள்ளி கல்வி இணை இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News November 29, 2024

ஊட்டி வனத்துறை எச்சரிக்கை

image

பந்தலூர் அருகே 30 கிமீ தூரம் உள்ள சேரம்பாடி வன சரகம் எல்லைக்கு உட்பட்ட எலியாஸ்கடை கடை பகுதியில் கடந்த சில நாட்களாக யானை முகாமிட்டுள்ளது. மேலும் வனத்துறை வாகனத்தை தாக்கியுள்ளது. நேற்று காலை முதல் சாலை ஓரம் புல் வெளியில் முகாமிட்டுள்ள கொம்பன் யானையை காண வாகனங்களை அருகில் நிறுத்த வேண்டாம் என வனத்துறை எச்சரித்து உள்ளனர்.

News November 29, 2024

புத்தாண்டு விடுமுறை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் சேவை

image

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி – குன்னூர் மற்றும் ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே டிசம்பர் 25ஆம் தேதி துவங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News November 29, 2024

நீலகிரியில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.11.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News November 28, 2024

நீலகிரி: ஜனாதிபதியின் நாளைய நிகழ்ச்சி நிரல்

image

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை (29/11/24) மாலை 6 மணிக்கு, ராஜ் பவனில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் 6 வகை பழங்குடி மக்களை சந்தித்து பேசுவதுடன், அவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். பின்னர் 5 அரங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மக்கள் கைவண்ணத்தில் உருவான பொருட்களை பார்வையிடுகிறார். மேலும்,பழங்குடி மக்களுடன் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்.

News November 28, 2024

புத்தாண்டு விடுமுறை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் சேவை

image

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி – குன்னூர் மற்றும் ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே டிசம்பர் 25ஆம் தேதி துவங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News November 28, 2024

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் (01.12.2024) அன்று நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், (02.12.2024) அன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!

News November 28, 2024

நீலகிரி குறித்த ஆவணப்படம் திரையிடல்

image

நீலகிரி பல்லுயிர் வலயம் குறித்த ஆவணப்படம் கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் அண்மையில் திரையிடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் திரையரங்கில் நடைபெற்றது. சந்தோஷ் கதூர் இயக்கத்தில் நீலகிரியின் வாழ்வியல் பற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆவணப்பட தயாரிப்பு குழுவை சேர்ந்தவர்களுக்கு கல்வி குழும இணைத் தாளாளர் சங்கர் வானவராயர் பாராட்டு தெரிவித்தார்.

News November 28, 2024

சுவர் விழுந்து ஒருவர் பலி

image

நீலகிரி, குன்னூர் டைகர்ஹில் பகுதியில் கட்டடத்தின் தூண், சுவர் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பராமரிப்பு பணியின் போது தூண், சுவர் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி முருகன் என்பவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!