Thenilgiris

News November 30, 2024

உதகை உருளைக்கிழங்கு ஏல மைய நேரம் மாற்றம் 

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் மேட்டுப்பாளையம் கிளை ஆரிகவுடர் ஏல மையத்தில், நாள்தோறும் காலை 11 மணியளவில் உதகை உருளைக்கிழங்கு ஏலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏல நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் காலை 9:30 மணிக்கு உதகை உருளைக்கிழங்கு ஏலம் நடைபெறும். ஏலத்திற்கு உதகை உருளைக்கிழங்கை கொண்டு வரும் விவசாயிகள் நேர மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

News November 30, 2024

நவம்பர் மாத பசுந்தேயிலை விலை நிர்ணயம்

image

குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் மூலமாக, நீலகிரி விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு மாதாந்திர கொள்முதல் விலை, தேயிலை தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூலம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடிய குழுவானது, நவம்பர் மாதத்திற்கான ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.20.80 என விவசாயிகளுக்கு வழங்க, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News November 30, 2024

உதகையில் இருந்து புறப்பட்டார் ஜனாதிபதி

image

நீலகிரி மாவட்டத்திற்கு 4 நாள் அரசு முறை பயணமாக வந்திருந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு, பயணத்தை முடித்துவிட்டு இன்று பனிமூட்டத்திற்கிடையே உதகை கோத்தகிரி சாலை மார்க்கமாக புறப்பட்டார். இவர் சாலை வழியே கோவை சூலூர் விமான நிலையம் சென்றடைகிறார். மேலும், ஜனாதிபதி வாகனமும், அவரது பாதுகாப்பாளர்கள் வாகனமும், பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், மெதுவாக சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன.

News November 30, 2024

மின் மோட்டார் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி மாவட்டத்தில், மானியத்தில் மின் மோட்டார் கருவிகள் வாங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு கைபேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவிகள் மற்றும் புதிய மோட்டார் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது என கூறியுள்ளார். 

News November 30, 2024

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு!

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கேட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பினர் மற்றும் அரசு வக்கீல் இடையே காரசார விவாதம் நடந்தது. இந்த வழக்கு ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. புதிய மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி முரளிதரன், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட வழக்கு விசாரணையை, டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

News November 30, 2024

நீலகிரி மக்களுக்கு கனமழை எச்சரிக்கை!

image

ஃபெஞ்சல் புயல் 47 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை வழியாகச் செல்லவுள்ளது. இதனால், கோவை நீலகிரி மாவட்டங்களில் டிச.1,2,3 தேதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 30 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மாவட்டத்தில் சில இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் எச்சரித்துள்ளார்.

News November 29, 2024

சென்னையில் நீலகிரியின் பாரம்பரிய நடனம்

image

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நீலகிரி திமுக இளைஞரணி சார்பில், அமைப்பாளர் இமயம் சசி அவர்கள் தலைமையில், உதயநிதி ஸ்டாலினின் அலுவலகத்தின் முன்புறத்தில் இருந்து 100 இளைஞர்கள், படுகா கலாச்சார உடை மற்றும் படுகா கலாச்சார நடனத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது படுகா நடனத்தை துணை முதல்வர் அவர்கள் வெகுவாக ரசித்து பாராட்டினார்.

News November 29, 2024

நீலகிரி: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ புத்தாண்டு விடுமுறை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் ➤ நீலகிரியில் ஹாக்கி போட்டி துவக்கம் ➤ உதகையில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ➤ குன்னூர் : அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு ➤ கோத்தகிரியில் நாளை கலைஞர் நூலக திறப்பு விழா ➤ கூடலூர் மாணவர் விடுதியில் அமைச்சர் ஆய்வு ➤ கேரள முன்னாள் எம்பிக்கு கூடலூரில் வரவேற்பு ➤ நீலகிரி பள்ளி ஆசிரியர்களுக்கு ஐஐடியில் பயிற்சி

News November 29, 2024

நீலகிரியில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை நகரம் மற்றும் ஊரக பகுதி, குன்னூர் நகரம் மற்றும் ஊரக பகுதி, கூடலூர் நகரம் மற்றும் ஊரக பகுதியில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

News November 29, 2024

முன்னாள் நகராட்சி கமிஷனரை கைது செய்ய வலியுறுத்தல்

image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ரூ.11.70 லட்சம் பணத்துடன் லஞ்ச தடுப்பு பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. லஞ்சம் வாங்கிய அவரை உடனடியாக கைது செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்” என்றார் .

error: Content is protected !!