India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் நேற்று ஊட்டியில் கூறுகையில், ‘நீலகிரி வரும் பயணிகள் ஊட்டி படகு இல்லம், பூங்காவை மட்டும் பார்த்து செல்கின்றனர். இதனால் ஊட்டியில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாவட்டம் முழுவதும் சுற்றுலாவை பரவலாக்கும் வகையில் கோத்தகிரி, குன்னூர், மைனலா பகுதிகளில் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து மேம்படுத்த ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.
நீலகிரி மாவட்டம், வன பகுதிகளில் உள்ள ஆதிவாசி மக்களின் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று கரிக்கையூரில் நடைபெற்றது. காவல் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 365 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் இருந்து 122 மனுக்கள் பெறப்பட்டன. இதில் செம்மனாரை, மேல்கூப்பு, கீழ்கூப்பு உள்ளிட்ட பகுதி மக்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, நாகை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா துறையின் கீழ் செயல் பட்டு வரும், தமிழ்நாடு ஓட்டலை மாநில சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்பு கூறுகையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசிடம் ரூ.160 கோடி கோரப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக L&T நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தப்படுகிறது என்றார்.
நடப்பு நிதி ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை ஊட்டியில் கூடுதல் கலெக்டர் கவுசிக் நேற்று வெளியிட்டார். அதன்படி, மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில், ரூ 3,727 கோடியே 83 லட்சம் என கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாயம் சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.3,091 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி சுற்றுலா இடங்களுக்கு வரும் உல்லாச பயணிகள் கூட்டம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பயணிகளை கவரும் வகையில், நீலகிரி சுற்றுலா ஸ்தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 32 கோடி உல்லாச பயணிகள் வருகை புரிந்து இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று ஊட்டியில் தெரிவித்தார்.
நீலகிரி சுற்றுலா இடங்களுக்கு வரும் உல்லாச பயணிகள் கூட்டம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பயணிகளை கவரும் வகையில், நீலகிரி சுற்றுலா ஸ்தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 32 கோடி உல்லாச பயணிகள் வருகை புரிந்து இருப்பதாக சுற்றுலா மந்திரி ராமசந்திரன் இன்று ஊட்டியில் தெரிவித்தார்.
நீலகிரி எம்பி தொகுதியின் பாஜக கலந்தாய்வு கூட்டம் நேற்று மேட்டுப்பாளையம் ஈஎம்எஸ் மகாலில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு, நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் எச்.மோகன்ராஜ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா மற்றும் பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு என மறைந்த முதல்வர் அண்ணாவால் பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் 3 இடங்களில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, முறையே 10 ஆயிரம், 7,000 மற்றும் 5,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
நீலகிரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடானது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.