India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி புறநகர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் நகரில் உள்ள ஒரு கடையில் பணி முடித்து மாலை வழக்கம்போல் வீடு திரும்பி உள்ளார். அப்போது மரவியல் பூங்கா அருகே நின்ற வாலிபர்கள் இவரை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி உள்ளனர். அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை வலை வீசி தேடி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் உதகை கூட்ஸ்ஷெட் சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகள் உள்ளன. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு நேற்று கிடங்குகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, தரம், எடை ஆகியவற்றை சோதனை நடத்தினார். அப்போது அவருடன் அதிகாரிகள் இருந்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, குந்தா, மஞ்சூர், பந்தலூர் உட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சங்கம் தமிழக வியாபாரிகள் சங்க பேரமைப்புடன் இணைக்கப்பட்டது. இந்த பேரமைப்பின் நடப்பாண்டுக்கான ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு விழா நாளை காலை 11 மணி அளவில் உதகை பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்யும் வகையில், புதிதாக கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இது கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் சென்று கட்டுமான பணிகளை ஆய்வு ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா நேற்று மாலை ஊட்டி YBA அரங்கில் பேசுகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடை பெற்றுள்ளன என குறிப்பிட்டார். இதில் மாநில பொதுச்செயலர் முருகானந்தம், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
நீலகிரி மாவட்டம், ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட வடவயல் பகுதியில் விவசாயம் நடத்தி வரும் பாலகிருஷ்ணன் என்பவரின் பட்டா நிலத்தில் காட்டு யானை ஒன்று சேற்றில் சிக்கி மரணம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் யானை மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரியில் கனமழையால் கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் வீடுகள், முதியோர் இல்ல கட்டடம், சாலை போன்றவற்றில் வெடிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இந்த நிலையில் மத்திய புவியியல் துறை 2 அதிகாரிகள் சென்னையில் இருந்து நேற்று மாலை கூடலூர் வந்தனர். பின்னர் இன்று முதல் 20 நாட்கள் ஆய்வு பணி நடைபெறும் என தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை அபிவிருத்தி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சுற்றுலா மையங்களை நவீனமாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறையின் அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கனமழையால் ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை கடந்த 1ஆம் தேதிமுதல் நேற்று (ஆக.6) வரை ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் விடுத்த செய்தி குறிப்பில் வரும் ஆக.15ம் தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றுமுதல் மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதாக சற்றுநேரத்தில் மாற்றி அறிவித்தது. ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.