India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், தீபாவளி போனஸ் கிடைக்காத காரணத்தால் இன்று காலை முதல் பணிக்கு செல்லாமல், அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த, நீலகிரி புத்தக திருவிழாவில், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் நடந்தது. 10 நாட்கள் நடந்த கண்காட்சியில், ரூ.13 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. 17,000 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். 9 பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், ரூ.52,000 காசோலை வழங்கப்பட்டது.
நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி படகு இல்லத்தில், படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டு தோறும் 16 லட்சம் பேர் படகு சவாரி செய்கின்றனர். இந்த நிலையில் ஏரியை ஒட்டிய ஓட்டல்கள், விடுதிகள், பங்களாக்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஏரியில் கலப்பதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்டுள்ள துர்நாற்றத்தால் பல சுற்றுலா பயணியர் படகு சவாரியை தவிர்த்து செல்கின்றனர்.
நீலகிரி மலை ரயிலின் ‘பர்னஸ் ஆயில்’ இன்ஜின்கள் டீசலுக்கு மாற்றப்பட்டு நடந்த 2வது சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றது. குன்னூர் பணிமனையில், சீனியர் டெக்னீசியன் மாணிக்கம் தலைமையில், இரு பர்னஸ் ஆயில் நீராவி இன்ஜின்கள் ஏற்கனவே டீசலுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், 2வது சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நடந்தது. அப்போது ரேக்பார் கொண்ட தண்டவாளத்தில் எளிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் வந்தது.
1. தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பிரியங்கா காந்தி வருகை புரிந்தார்.
2. குன்னூர் சாலையில் தீ விபத்து, சமூக ஆர்வலரால் அணைக்கப்பட்டது.
3.பந்தலூரில் பழங்குடியின மக்களின் பூ பூத்தரி எனும் அறுவடைத் திருவிழா நடைபெற்றது.
4. குன்னூர், உதகை, கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் பனியின் தாக்கம் அதிகரிப்பு.
5. கோத்தகிரி மருத்துவமனையில் புதிய எக்ஸ்ரே கருவி அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
பந்தலூரில் பழங்குடியின மக்களின் பூ பூத்தரி எனும் அறுவடைத் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி 10ஆம் நாள் நடைபெறும். பூஜைகள் செய்த பின் வயலுக்கு சென்று குல தெய்வத்திற்கு பூஜைகள் செய்து நெற்கதிர்களை பறித்து மகா விஷ்ணு கோயிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து பழங்குடியின இசை வாத்தியாங்களுடன் நெற்கதிர்களுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம், நெற்கதிர்கள், அரசி இலைகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை நேரத்தில் நீர்பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. மலைப்பாதைகளில் பனிமூட்டமாக இருப்பதால்,வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
1.ஊட்டி உருளைக்கிழங்கு ஏல விலை கிலோவிற்கு ரூ.4 குறைந்தது.
2.நீலகிரியில் நீர்ப்பனியின் தாக்கம் அதிகரிப்பு
3.நீலகிரி மாவட்ட மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயமாக்கப்பட்டது.
4.தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் திறந்த வெளியில் மலம் கழித்தால் அபராதம்.
5.மஞ்சூரில் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது
நீலகிரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.