Thenilgiris

News October 31, 2024

பசுந்தேயிலை விலை ரூ.24.59 ஆக தேயிலைவாரியம் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாட்லீஃப் தேயிலை தொழிற்சாலைக்கு சிறு, குறு சாகுபடியாளர்கள் தினந்தோறும் பசுந்தேயிலைகளை பறித்து அளிக்கின்றனர். பசுந்தேயிலை அரைத்து தேயிலைதூளாக மாற்றி வாரந்தோறும் விற்பனை செய்யப்பட்டுள்ள தூளின் விலையை கணக்கிட்டு, அதன்படி மாதந்திர விலையை தேயிலைவாரியம் நிர்ணயம் செய்கிறது. அக்டோபர் மாதத்தின் விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.24.59-ஆக அளித்திட தேயிலைவாரியம் உத்தரவிட்டுள்ளது. 

News October 31, 2024

உதகையில் விவசாயிகள் கூட்டம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நவம்பர் 15 தேதி 11 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை 4ஆம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனநர், தபால் பெட்டி 72, உதகை என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பலாம். கூட்டத்திலும் குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்தார்.

News October 31, 2024

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும்

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தீபாவளி பண்டிகையான இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று (31.10.2024) மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 31, 2024

தீபாவளி பாதுகாப்பு முன்னெச்சிரிக்கைகள்!

image

➤எளிதில்‌ தீப்பற்றும்‌ ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக்‌ கூடாது.
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம்‌, சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள்‌ வெடிக்கக்‌ கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப்‌ பயன்படுத்த வேண்டும்‌.
➤ வாளியில்‌ தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்‌.
➤ தீக்காயம்‌ ஏற்பட்டால்‌ சுயமாக மருந்துகளை எடுத்துக்‌ கொள்ளாமல்‌ மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்‌. SHARE IT!

News October 30, 2024

நீலகிரியில் தலைப்புச் செய்திகள்

image

1. குந்தா தாலூகா அலுவலகத்தில் லஞ்ச வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
2.குன்னூர்: திமுகவின் பவள விழா நலத்திட்ட உதவிகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
3.நீலகிரி: ஆண்களை விட பெண் வாக்காளர் அதிகம்
4.குன்னூரில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
5.மஞ்சூரில் ரூ.80 லட்சத்தில் சாலை சீரமைப்பு தொடக்கம்

News October 30, 2024

நீலகிரி: லஞ்ச வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை

image

குந்தா தாலூகா அலுவலகத்தில் தந்தையின் இயற்கை மரணத்திற்கான உதவி தொகை காசோலை வாங்க சென்ற நாராயணன் என்பவரிடம் தாசில்தார் கனகம் மற்றும் உதவியாளர் சாஸ்திரி ஆகியோர் லஞ்சம் கேட்டது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த ஊட்டி நீதிபதி செந்தில்குமார் நேற்று கனகம், சாஸ்திரிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News October 30, 2024

நீலகிரி: ஆண்களை விட பெண் வாக்காளர் அதிகம்

image

நீலகிரி கலெக்டர் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். இதன்படி ஊட்டி தொகுதியில் 93,942 ஆண்களும், 102,805 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் என மொத்தம் 196,758 பேர் உள்ளனர். கூடலூரில் 93,722 ஆண்களும், 99,546 பெண்களும் மற்றும் 3ஆம் பாலினம் 4 பேர் என மொத்தம் 193,272 பேர் உள்ளனர். குன்னூரில் 89,338 ஆண்களும், 99,589 பெண்களும், 3ஆம் பாலினம் 4 பேர் என மொத்தம் 188,931 பேர் இடம் பெற்றுள்ளனர்.

News October 30, 2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் 

image

தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கும்போது இயற்கைச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் வெடிக்க வேண்டும். காவல் துறை, தீயணைப்புத் துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறைகளின் விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவமனை, வாகனம் அருகில், பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 29, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1. டேன்டீ தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு!
2. ஜெஎஸ்எஸ் கல்லூரிக்கு ஏ++ தரச்சான்று வழங்கப்பட்டது.
3. வண்ணாரபேட்டையில் மாற்று திறனாளிகள் சிறப்பு பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
4.நீலகிரி: புத்தக திருவிழாவை 17,000 பேர் பார்வையிட்டனர்.
5.சோலூரில் செந்நாய்களின் கூட்டம்: மக்கள் அச்சம்
6.ஊட்டி படகு இல்ல ஏரியில் துர்நாற்றம்

News October 29, 2024

டேன்டீ தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டம், கூடலூர், உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் டேன்டீ என்று தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. இதில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி முன்னிட்டு 20% போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.