Thenilgiris

News March 23, 2024

உதகையில் மண்டல பாஜக கூட்டம்

image

உதகை அருகே தும்மனட்டியில் உதகை கிழக்கு  மண்டல் மையக்குழு கூட்டம் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. மண்டலத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.  மாநில செயற்குழு உறுப்பினர்  ராமன், மாவட்ட துணை தலைவர் பாபு,  மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட தமிழ் இலக்கியப் பிரிவுத் தலைவர் ராஜூ, மண்டலப் பொதுச்செயலாளர் பெள்ளி ராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

News March 22, 2024

நீலகிரி மக்களவை தொகுதி: வேட்பாளர் விவரம்

image

நீலகிரி எம்பி தொகுதியின் பாஜக வேட்பாளர் பயோ டேட்டா இன்று (மார்ச் 22) அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர்: எல்.முருகன், முகவரி-353, குருஜி, 1வது குறுக்கு தெரு, அண்ணா நகர், சென்னை. பெற்றோர்: லோகநாதன், வருடம்மாள், பிறந்த தேதி: 29.05.1977, கல்வி தகுதி: MLM, மனைவி: கலையரசி, டாக்டர், மகன்கள்: தர்னேஷ், இந்திரஜித், தொழில்: வக்கீல், அரசியல்வாதி, அரசு பதவி: ராஜ்யசபா எம்பி (மபி) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2024

நீலகிரி தொகுதியில் இதுவரை மனுதாக்கல் இல்லை

image

மக்களவை தேர்தல் அறிவிப்பை அடுத்து, இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன் கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கலை ஒட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆனால் சுயேச்சை வேட்பாளர் உட்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் 2வது நாளான நேற்றும் (மார்ச் 21) மனு தாக்கல் செய்யவில்லை.

News March 21, 2024

நீலகிரி; பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

image

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை சற்றுமுன் வெளியானது. இந்தப்பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், நீலகிரி தொகுதி வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் ஆ.ராசா இந்ததொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் எல்.முருகன் அந்த தொகுதியில் போட்டியிடுவதால் நீலகிரி ஸ்டார் தொகுதியாகியுள்ளது.

News March 21, 2024

நீலகிரி விவசாய குறைதீர் கூட்டம் ரத்து

image

நீலகிரி விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாதம் ஒரு முறை நடத்தப் பட்டு வருகிறது. இம்மாதம் குறைதீர் கூட்டம் நாளை (மார்ச் 22) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்து உள்ளார்.

News March 21, 2024

2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக லோகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது?

image

தமிழகம், புதுவையில் எம்பி தேர்தல் ஏப்.19இல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில், கூட்டணியே அமைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை மார்ச் 23ஆம் தேதி சீமான் வெளியிடுவார். அதன்படி நீலகிரி தொகுதி வேட்பாளராக ஆ.ஜெயக்குமார் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 21, 2024

நீலகிரி: தேர்தல் செலவின பார்வையாளர்கள் கலந்துரையாடல்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2004ஐ முன்னிட்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் டி.கிரண் மற்றும்  சந்தீப் குமார் மிஸ்ரா  ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட் ஆட்சியர் மு.அருணா முன்னிலை வகித்தார்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2024

கோத்தகிரியில் 7 பேருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்

image

கோத்தகிரி பகுதியில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோத்தகிரி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் குடிபோதையில் வாகனத்தை இயக்கிய 7 பேருக்கு மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோத்தகிரி மாஜிஸ்திரேட் வனிதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.