Thenilgiris

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

நீலகிரியில் தேர்தல் பறக்கும்படை பணம் பறிமுதல்

image

நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டமன்றத் தொகுதிகளான ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், பவானி சாகர், அவினாசி ஆகிய 6 தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று (மார்ச் 24) மதியம் வரை 6 தொகுதிகளில் மொத்தம் ரூ.1,47,84,808 பறிமுதல் செய்துள்ளனர்.

News March 24, 2024

பந்தலூர்: வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ

image

பந்தலூர் அருகே கோட்டப்பாடி பகுதிகளில் வனப்பகுதி உள்ளது. தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் செடி கொடிகளும் காய்ந்த நிலையில் உள்ளன. திடீரென சேரம்பாடி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனகாப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News March 24, 2024

நீலகிரியில் இராசா நாளை வருகை

image

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அறிக்கையில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.இராசா நாளை நீலகிரி வருகிறார். அவருக்கு   கோத்தகிரியில் முற்பகல் 11 மணி, உதகையில் பகல்  12 மணி , கூடலூரில் மாலை 4 மணிக்கும் மாபெறும் வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே திமுக மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News March 24, 2024

நீலகிரி: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, நீலகிரியில் ஆ.ஜெயகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

உதகையில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

image

உதகை-குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள நொண்டிமேடு பகுதிக்கு குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் (மார்ச் 22) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குடிநீர் பிரச்சனை குறித்து பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இந்த மறியல் நடந்ததாக தெரிவித்தனர். உதகை பி1 நிலைய போலீசார் பொதுமக்களை சமாதானம் படுத்தி அப்புறப்படுத்தினர்.

News March 23, 2024

உதகை நகர பாஜக தேர்தல் பணி குழு கூட்டம்

image

உதகையில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் உதகை  சட்டமன்ற தொகுதி பாஜக வாக்கு சாவடி குழு மற்றும் தேர்தல் பணி குழு கூட்டம் இன்று (23 தேதி ) நடைபெற்றது. உதகை நகர பாஜக  தலைவர் சி பிரவீன்  தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட பொது செயலாளர்கள் பரமேஸ்வரன், அருண், உதகை நகர பொது செயலாளர்கள் சுரேஷ்குமார், ரித்து கார்த்திக், துணை தலைவர் ஹரி கிருஷ்ணன்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

நீலகிரி அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் எஸ்.பி.வேலுமணி, ப.தனபால், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் விவரம்

image

நீலகிரி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 1963இல் பிறந்த இவரின் முழு பெயர் ஆண்டிமுத்து ராசா. இதுவரை மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் தொலைதொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இதுவரை தலா 4 முறை பெரம்பலூர், நீலகிரி பகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.

News March 23, 2024

உதகை: 3வது நாளாக வேட்பு மனு தாக்கல் இல்லை

image

சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானி சாகர் மற்றும் மலை மாவட்டமான ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நீலகிரி மக்களவை தொகுதி. தேர்தல் தலைமை அலுவலகமான மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஊட்டியில் உள்ளது. இங்கு நேற்று வரை 3 நாட்கள் ஆகியும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.