India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேவர்சோலை அருகே வனவிலங்கு வேட்டையின் போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் உயிர் இழந்தார். கூடலுார் வனஅலுவலர் உத்தரவுப்படி, அப்பகுதியில் வன விலங்கு வேட்டைக்கு சென்றது தொடர்பாக, நவசாத், ஜாபர்அலி,ஐதர்அலி,சதிஷ் ஆகிய 4 பேர் மீது,வனச்சரகர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்தார். பின் கூடலுார் கோர்ட்டின் உத்தரவு பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு பேரையும் ‘கஸ்டடி’ எடுத்து விசாரணை செய்கின்ரனர்.

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள பழங்குடியினர் கிராமமான நஞ்சப்பச்சத்திரம் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தினசரி மக்கள் உபயோகிக்கும் பாதையில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாடுவதற்கு சிரமப்படுகின்றனர். வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அடர்ந்த வனத்திற்குள் விரட்ட கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கடைகளை இடித்து வணிக வளாகம் கட்டும் பணி ஆரம்பமாக உள்ள நிலையில், கடைகளை இடிக்க கூடாது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மார்கெட் இடிக்கும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

IOCL ஆனது Junior Attendant உள்ளிட்ட 246 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி / ITI / Graduate தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் ரூ.23,000/- முதல் ரூ.1,05,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். விணப்பிக்க இங்கே<

பாகுபலி திரைப்பட கதாநாயகி ‘அவந்திகா’ பெயரில் டெலிகிராமில் போலி ஐடி செயல்பட்டு வருகிறது. இதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் வரும் என்ற குறுஞ்செய்தியை நம்பி, குன்னூர் பாதிரியார் ஒருவர் ரூ.6 லட்சம் இழந்தார். மேலும், 25 வயது ஐடி வாலிபர் ரூ.6.20 முதலீடு செய்து இழந்தார். இந்நிலையில், இவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஊட்டி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ”நகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான நீராதாரங்களில், 65 சதவீதம் அளவு தண்ணீர் இருப்பில் உள்ளதால்,கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. அவ்வாறு சில வார்டுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டால், நகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து சமாளிக்கப்படும். யாராவது தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை பாயும்.

கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, நீலகிரி மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் லஞ்சமாக பெற்ற, நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் என்பவரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி குன்னூரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இவரை அணுகியபோது, லஞ்சம் பெற்ற தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து 2020, 2021 ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கமான, அதி – உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் வென்ற சிறந்த காவல் அதிகாரிகளுக்கு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா இன்று பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் அமைந்துள்ளது எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில். பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் பாலதண்டாயுதபாணியின் வடிவமைப்பு போல, இங்கு முருகப்பெருமானின் வடிவமைப்பும் உள்ளது. அதேபோல், 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்களும், 108 திருநாமங்களை நினைவுகூரும் வகையில் 108 படிகளும் உள்ளன. மேலும், 40 அடி உயரத்தில் முருகன் கம்பீரமாக மலை நடுவே எழுந்தருளி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.