Thenilgiris

News November 3, 2024

நீலகிரியில் தலைக்குப்புற கவிழ்ந்த கார் 

image

நீலகிரி மாவட்டத்திற்கு 4 நாட்கள் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து, பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். இதனிடையே, உத்தகையிலிருந்து குன்னூர் சென்று கொண்டிருந்த கார் எல்லநல்லி பகுதியில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.நீலகிரி மாவட்டத்தில் கல்லறை திருநாள் நடைபெற்றது.
3.குன்னூர் நகராட்சி துணைத்தலைவர் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சருடன் சந்திப்பு
4.உதகையில் ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்
5.கேரட் விலை ஒரே நாளில் திடீர் உயர்வு

News November 2, 2024

குன்னூர் பகுதியில் கார் மீது மரம் விழுந்து ஒருவர் பலி

image

 குன்னூர்ப்அருகே வெல்லிங்டன் பராக்ஸ்    எம். ஆர் .சி  மெயின் கேட் பகுதி அருகே சாலையில்  இன்று  மாலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது . அப்போது சாலை ஓரத்தில்  இருந்த ஒரு  மரம் காரின் மீது விழுந்தது .  கார்  உள்ளே  கணவன்  மனைவி இருவரும் விபத்தில் சிக்கி உள்ளனர் . ஒருவரின் நிலைமை கவலை கிடமாக உள்ளது . கார்  ஓட்டுநர் பலியானதாக தெரிகிறது.

News November 2, 2024

உதகை சுற்றுலா செல்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

image

மலைகளின் அரசி நீலகிரி உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் நகரின் சுற்றுலா தலங்களை குடும்பத்துடனும், குதூகலத்துடன் சுற்றிப்பார்க்க அரசு பேருந்து பெரியவர்கள் ரூ.100, சிறியவர்கள் ரூ.50 என்ற கட்டணத்தில் ஏற்பாடு செய்துள்ளது. மத்திய பேருந்து நிலையம், தண்டர் வோல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச்மார்க் டீ மியூசியம், ரோஜா பூங்கா வழித்தடத்தில் வாகன நெரிசலின்றி சுற்றிப்பார்க்கலாம்.

News November 2, 2024

நீலகிரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் -தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்காக உணவு வசதி, விடுதி வசதியுடன், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் உள்ள மாணவர்களுக்கு 1 வருட காலம் பட்டய கணக்காயர், நிறுவன செயலாளர் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதால், நீலகிரி ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் தாட்கோ (www.tahdco.com) மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 1, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1. நீலகிரியில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு
2.நீலகிரி மாவட்டத்தில் காற்று மாசு அதிகரிப்பு
3.உதகை: 80 முதியவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கல்
4.ஊட்டி மோட்சராக்கினி ஆலயத்தில் ஜெபமாலை வழிபாடு
5.நீலகிரியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்
6.நீலகிரிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

News November 1, 2024

நீலகிரி மாவட்டத்தில் காற்று மாசு அதிகரிப்பு 

image

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், மாலை நேரத்தில் வெடித்த பட்டாசுகள் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக உதகையில் காற்றின் மாசு வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே, அடுத்த 3 நாட்களுக்கு காலை நடைப்பயிற்சி மேற்கொள்வோர், முககவசம் அணிந்து செல்ல மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

News November 1, 2024

நீலகிரியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்

image

தீபாவளி தொடர் விடுமுறையால் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் – ஊட்டி காலை 8:20 மணி, ஊட்டி – குன்னூர் மாலை 4:45 மணி என 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஊட்டி – கேத்தி ‘ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன்’ சிறப்பு ரயில் காலை 9:45 மணி, 11:35 மணி; மாலை 3:00 மணிகளில் சுற்று ரயில்களாக இயக்கப்படுகின்றன.

News October 31, 2024

தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்ற மாவட்ட ஆட்சியர்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை நாளினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா ஆகியோர் இருந்தனர்.

News October 31, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1. கண்காணிப்பு கேமாரா பதிவுகளை ஆய்வு செய்த எஸ்.பி
2. சாலையில் சுற்றித் திரிந்த காட்டெருமை
3.பசுந்தேயிலை விலை ரூ.24.59 ஆக தேயிலைவாரியம் அறிவிப்பு
4. சினிமா பொழுது போக்கு மட்டுமே, நிஜம் அல்ல: நீதிபதி கருத்து
5. உதகையில் விவசாயிகள் கூட்டம்
6. நீலகிரியில் காபி மகசூல் அதிகரிப்பு
7. குன்னூரில் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்பு