Thenilgiris

News April 17, 2024

அரசு மருத்துவமனையில் மக்கள் பாதிப்பு

image

நீலகிரி குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ENT (காது தொண்டை மூக்கு) மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவரை பணியமர்த்த வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

News April 17, 2024

நீலகிரியில் ஆ.ராசா தீவிரம்!

image

உதகை அருகே கடநாடு, எப்பநாடு பகுதிகளில் 10 கிராமங்களில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.இராசா இன்று காலை 10 மணியளவில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது படுக சமுதாய மக்கள் தங்கள் பாரம்பரிய முறையில்   வரவேற்றார்கள். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆர்.கணேஷ் எம்எல்ஏ ஆகியோர் பேசினார்கள்.

News April 17, 2024

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப். 17) மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான எந்தவிதமான பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது. மேலும் தேர்தல் தொடர்பான விஷயத்தை திரைப்படங்கள் மூலமாகவோ, டிவி மூலமாகவோ காட்சிப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

திமுக வேட்பாளர் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்

image

நீலகிரி மக்களவைத் தொகுதி INDIA கூட்டணி  வேட்பாளர் ஆ.ராசா  நாளை (ஏப்.17) கடநாடு கிராமத்தில்  காலை 10.30 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். எபநாடு 11 மணி, கூக்கல் தொரை 12 மணி, தும்மனட்டி பகல் 1 மணி, உதகை நகர நொண்டிமேடு 3 மணி, காந்தல் பஜார் மாலை 4 மணி, உதகை மெயின் பஜாரில் மாலை 5 மணி அளவில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இந்த தகவலை மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தெரிவித்தார்.

News April 16, 2024

நீலகிரியில் ராகுல் காந்தி மாணவிகளுடன் செல்பி

image

கூடலூர் அருகே தாளூர் பகுதிக்கு நேற்று (ஏப்.15) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மைசூரிலிருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கிருந்த மாணவிகளுடன் செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார். இதையடுத்து பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம், படித்த இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

News April 16, 2024

முதுமலையில் மயில் கொன்றை மலர்கள்

image

முதுமலை தெப்பக்காடு பகுதியில் ‘மயில் கொன்றை’ மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதை உல்லாச பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வறட்சியின் காரணமாக இலைகள் காய்ந்து உதிர்ந்து பொலிவிழந்த நிலையில், தெப்பக்காடு சாலை ஓரங்களில் மலர்கள் பூத்திருப்பது மனதுக்கு இதமானதாக உள்ளது என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

News April 15, 2024

வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

News April 15, 2024

தேர்தல் முடிந்தாலும் விதிமுறைகள் தொடரும்

image

நீலகிரி மாவட்ட மக்களவை தொகுதி மற்றும் தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவின்படி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதி வரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும், வாகன சோதனையும் தொடரும் என நீலகிரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

உதயநிதி ஹெலிகாப்டரை பறக்கும் படை சோதனை

image

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (ஏப். 14) ஊட்டி வந்தார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் தரையிறங்கிய, அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதில் ஏதும் கிடைக்கவில்லை. இன்று காலை (ஏப்.15) ஆ.ராசாவுக்காக ஓட்டு கேட்டு, காபி ஹவுஸ் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

News April 14, 2024

உதகையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

image

உதகையில் மாவட்ட திமுக அலுவலக அரங்கில் டாக்டர்  அம்பேத்கர்  பிறந்தநாள் முன்னிட்டு ” சமத்துவ நாள் ” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (14 தேதி ) நடைபெற்றது . மாவட்ட திமுக  செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார் . சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்  முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.