Thenilgiris

News April 28, 2024

நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தியில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழ  கண்காட்சி மே 24, 25, 26 தேதிகளில் மூன்று நாள் ந்டைபெறுகிறது . இதை முன்னிட்டு சிறந்த பழத்தோட்டங்கள் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும். இதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்கா அலுவலகத்தில் நாளை (ஏப்ரல்.29) முதல்  போட்டிக்கான விண்ணப்ப படிவுகள் வழங்கப்படுகிறது .போட்டி படிவங்களை சமர்பிக்க மே 11 தேதி கடைசி நாளாகும்

News April 28, 2024

மூவுலகரசி அம்மன் அலங்கார திருவீதி உலா

image

உதகை காந்தல் அருள்மிகு மூவுலகரசி அம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் நேற்று ( 27 தேதி ) மலையாள சமூகத்தார் சார்பில்  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . அதை தொடர்ந்து இரவு 8 மணியளவில் மூவுலகரசி அம்மன் அலங்காரத்தில் திரு உலா நடைபெற்றது.  கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி வழியாக முக்கோணம் சென்று மீண்டும் இரவு 10 மணியளவில் கோயிலை வந்தடைந்தது.

 

News April 27, 2024

நீலகிரியில் நிலச்சரிவு அபாயம்: ஆட்சியரிடம் மனு வழங்கல்

image

முன்னாள் கூடுதல் தலைமை செயலாளரும், நீலகிரி சுற்று சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான சுர்ஜித் கே. சவுத்திரி நீலகிரி ஆட்சியருக்கு இன்று மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் குன்னூர், எடப்பள்ளி, இளித்தொரை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் விதி மீறி பொக்லைன் மூலம் பாறை உடைக்கும் முயற்சி நடக்கிறது. இதனால் நிலச்சரிவு அபாயம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

News April 27, 2024

ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை

image

குன்னூர் பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 கடைகளுக்கு நேற்று (ஏப். 26) வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ்களை நேரில் சமர்ப்பித்தனர். கோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 42 கடைகளும், இரண்டாம் கட்டமாக 2 கடைகளும் என 44 கடைகள் அகற்றப்பட்டன. விரைவில் 7 கடைகள் இடிக்கப்பட உள்ளது என இன்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

News April 27, 2024

பலாபழம் எடுத்த சென்ற காட்டு யானை

image

கூடலூர் மார்த்தோமா நகர் பகுதியில் நேற்று இரவு (ஏப். 26) காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சாலையோர பலாப்பழம் கடையிலிருந்து காட்டு யானை ஒன்று பழத்தை எடுத்து செல்வதை கண்டனர். உடனே போலீஸ் வாகனம் சைரன் ஒலிக்க செய்து யானையை விரட்டினார்கள். வறட்சி காரணமாக வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி உலா வருவது வாடிக்கையாகி வருகிறது.

News April 27, 2024

வனவிலங்குகள் தாகத்தை தணிக்கின்றன

image

முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் யானைகள் மற்றும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்கு காமராஜர் அணை திறக்கப்பட்டுள்ளது . அதனால்  ஆற்று பகுதியில்  காலை , மாலை நேரங்களில் வனவிலங்குகள் தண்ணீர் தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன . தெப்பக்காடு வாழ் பழங்குடியினர் குளியல் போடுகின்றனர் . இந்நிலையில் முதுமலை பகுதிகளில் மழை அறிகுறி உள்ளதாக இயற்கை சூழல் ஆர்வலர் மானஸ் சிவதாஸ் தெரிவித்தார்.

News April 26, 2024

கடும் வெயில்- பீர் விற்பனை அமோகம்

image

நீலகிரியில் உள்ள 6 தாலுகாவில் 73 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இவைகளில் தினசரி 90 ஆயிரம் முதல் 1 லட்சம் பல்வேறு மது வகைகள் விற்கப்படுகிறது. அதில் பீர் வகை 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பாட்டில் விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரம் பாட்டிலாக விற்பனை அதிகரித்து உள்ளது என டாஸ்மாக் அதிகாரி இன்று (ஏப்.26) கூறினார்.

News April 26, 2024

இரு சக்கர வாகனம் பயன் படுத்துங்கள்..

image

நீலகிரி, மே 1ல் கோடை விழா தொடங்குவதை அடுத்து சுற்றுலா கூட்டம் கூடுதலாகும். இதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை சீராக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று (ஏப். 25) நடந்தது. இதில் கடை நடத்தும் வியாபாரிகள் 4 சக்கரங்களுக்கு பதிலாக 2 சக்கர வாகனத்தை பயன் படும் படி அறிவுறுத்தப் பட்டது.

News April 26, 2024

கூடலூர் ஸ்ரீஜான் அணி வெற்றி

image

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கிரிக்கெட் அணிகள் [ஏ.பி.சி.3 டிவிஷன் ஆக பிரிக்கப்பட்டு ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  கோத்தகிரி காந்தி மைதானத்தில் சி டிவிஷன் பிரிவு போட்டியில் கூடலூர் ஸ்ரீ ஜான் அணி மற்றும் குன்னூர் ஹில்ஸ் குயின் அணி பங்கேற்று விளையாடினர். 33 ஓவர்கள் கொண்ட போட்டியில் கூடலூர் ஸ்ரீஜன் அணி அணி 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

News April 25, 2024

4 டாஸ்மாக் கடைகள் நாளை வரை மூடல்

image

கேரளாவில் நாளை (ஏப்.26) மக்களவைத் தேர்தல் நடைப் பெறுகிறது. இதையொட்டி, தமிழக எல்லையான, நம்பியார், குன்னூர், தாளூர், அய்யன் கொல்லி, எருமாடு ஆகிய இடங்களில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. நாளை மறுநாள் (ஏப். 27) கடைகள் திறக்கப்படும். இதனால் மது பிரியர்கள் கோரஞ்சால், குந்தலாடி ஆகிய இடங்களில் உள்ள கடைகளை நாடி செல்கின்றனர்.