Thenilgiris

News November 4, 2024

மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை துணை ஆட்சியர் ஆய்வு !

image

கோத்தகிரி,15-வது வார்டு குமரன் காலனி பகுதியில் கடந்த முன்தினம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் மண்சரிந்த திட்டுகளை துணை ஆட்சியர் சங்கீதா, வட்டாட்சியர் கோமதி, வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், ஆகியோர் வார்டு உறுப்பினர் மு.க கணபதியின் கோரிக்கையை ஏற்று வருகை தந்து பாதிக்கப்பட்ட பொது மக்களை வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

News November 4, 2024

நீலகிரியில் அவசரகால எண்கள் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதனால் குன்னூர், உதகை, கோத்தகிரி போன்ற பகுதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து கடும் பாதிப்பை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் அவசர கால உதவி எண்கள் அறிவித்துள்ளது. 0423-2450034, 0423-2450035 மற்றும் வாட்ஸ்அப்: +919943126000 எண்களில் தொடர்பு கொள்ளவும்.

News November 4, 2024

நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

image

உதகை , மேட்டுப்பாளையம் இடையே பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததை அடுத்து, தண்டவாளம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெறுகின்றன. மேலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையால் நீலகிரி மலை ரயில் சேவை நவம்பர் 5 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News November 4, 2024

குன்னூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

News November 3, 2024

கூடலூர்: தடுப்பு சுவர் மீது மோதி நின்ற லாரி !

image

கூடலூர் ,காந்தி சிலை அருகில் சுமார் எட்டு மணி அளவில் உதகையிலிருந்து பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுனரை கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது ஏறி நின்றது .நல்வாய்ப்பாக யாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை .இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. உடனடியாக கூடலூர் காவல் துறையினர் வருகை தந்து போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 3, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் 2ஆம் நாள் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.பந்தலூரில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
3.நீலகிரி அனைத்து சேவை இல்லங்களும் முறைப்படி பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு
4.குன்னூர் – ஆப்பிள் பீ ரோட்டில் மண் சரிவு
5.குன்னூரில் 130 மி.மீ மழை பதிவு
6.பந்தலூர்: இறகு பந்து போட்டி வயநாடு மாவட்ட அணி வெற்றி

News November 3, 2024

நீலகிரி அனைத்து சேவை இல்லங்களும் முறைப்படி பதிவு செய்ய அழைப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் முறைப்படி பதிவு செய்யாமல் செயற்படும் குழந்தைகள், மனவளர்ச்சி, ஆதரவற்றோர், மாற்று திறனாளிகள், போதைமறுவாழ்வு மையம் போன்ற பெயர்களில் சேவையாற்றும் இல்லங்கள் அனைத்தும் முறைப்படி உரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு மற்றும் உரிமை சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் பெற வேண்டுமென நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 3, 2024

நீலகிரியில் 11,670 பேருக்கு ரூ.19.57 கோடியில் சிகிச்சை

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் 11,670 பேருக்கு ரூ.19.57 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

News November 3, 2024

நீலகிரியில் பதிவான மழை அளவு

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு: (மில்லி மீட்டரில்) கோத்தகிரி 138, கீழ்கோத்தகிரி 143, அளக்கரை 137, குன்னூர் 105, பர்லியார் 123, பில்லிமலை 118, கோடநாடு 67 என பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2024

நீலகிரியில் தலைக்குப்புற கவிழ்ந்த கார் 

image

நீலகிரி மாவட்டத்திற்கு 4 நாட்கள் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து, பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். இதனிடையே, உத்தகையிலிருந்து குன்னூர் சென்று கொண்டிருந்த கார் எல்லநல்லி பகுதியில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.