India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து, சில்ஹல்லா மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே அறிவித்தது போல், நாளை 24 மணி நேரம் கடை அடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பரூக் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்க விருப்பமில்லை எனில் தங்களது உரிமத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக www.tnpds.gov.in தங்களது குடும்ப அட்டையினைப் பொருள் இல்லாத குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்” என நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நாளை ஏப்.1 முதல், வரும் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும். இதில், வார நாட்களில் 6,000 வாகனங்கள், வார இறுதியில் 8,000 வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். SHARE IT!

நீலகிரி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் வரும் ஏப்.2 மற்றும் 3 இரண்டு நாட்களுக்கு நீலகிரி உட்பட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் இடது பாகத்தில் மயில் பீலி இருப்பதும் அபூர்வமாக காணப்படுவதாகவும். மேலும், முருகனுக்குகந்த செவ்வாய் கிழமைகளில் உடல்நலம் குன்றியவர்களையும், கால்நடைகளையும் இந்த மயில் பீலியால் தடவி பூஜித்த திருநூறு பூச விரைவில் உடல்நலம் தேறுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி புதிய நராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் செங்கம், குமரி, அவிநாசி, பெருந்துறை உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகளை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, 58 மையங்களில் நடக்கிறது. அதில், ‘3,497 மாணவர்கள், 3,320 மாணவியர்,’ என, மொத்தம், 6,817 பேர் தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வுகள், 126 பேர் தேர்வு எழுதுகின்றனர்.நேற்று நடந்த தமிழ் தேர்வை (முதல் நாளில்,) ‘மாணவர், 97; மாணவியர்,’ 56 என 153 பேர் ‘ஆப்செனட்’ ஆகினர்.

நீலகிரி வாகன கட்டுப்பாடு வழக்கு நேற்று நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது,ஊட்டி, வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை.அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை உயர்நீதிமன்றம் விதித்திருக்கிறது என்று கூறி,மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்துவிட்டது.

உதகை அருகே புலி தாக்கி இளைஞர் உயிரிழந்த பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கவர்னர்சோலையில் 15 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இது குறித்து வனச்சரகர் மஞ்சு ஹாசினி கூறும் போது, ”இளைஞரை கொன்ற விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 15 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு நாட்கள் கண்காணித்து பின்னர் கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.