India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்னூர் கிளப் ரோடு பகுதியில் ஒரு பங்களா வளாகத்தினுள் கடந்த 14ஆம் தேதி ஒரு கரடி புகுந்தது. குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் குழுவினர் கரடியை விரட்டுதல் அல்லது கூண்டில் பிடிப்பது என பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மழை பெய்வதால் கரடி அங்கும் இங்கும் ஓடி வனத்துறைக்கு போக்கு காட்டுகிறது. அதனால் அந்தப் பகுதியில் யாரும் தனியாக போக வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நீலகிரியில் மலை காய்கறிகள் தமிழகம் உட்பட கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில்
நடப்பாண்டில் ஏப். இறுதி வரை மழை பெய்யவில்லை. இந்த மாதம் மே 4ம் தேதி துவங்கிய கோடை மழை மாவட்ட முழுவதும் அவ்வப்போது பெய்தது நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 12.69 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது
விவசாயத்திற்காக தங்கள் நிலங்களை தயார் செய்யும் பணியில் மலை மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் பகுதியில் நடப்பாண்டு துவக்கம் முதல் கோடை மழை ஏமாற்றியது. இதனால் பசுந்தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே நிரந்தர விலையின்றி சிரமப்பட்டு வரும் தேயிலை விவசாயிகள் உற்பத்தி பாதிப்பால் கடும் நஷ்டமடைந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கோடை மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து, பசுந்தேயிலை உற்பத்தி அதிகரிக்க துவங்கியுள்ளது.
கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில் 31வது படுகர் தின விழா இன்று நடைபெற்றது. ஊர் தலைவர் எ.பில்லன் தலைமை தாங்கி வெள்ளை நிறம் கொடி ஏற்றி வைத்தார். சமுதாய தலைவர் எச்.பி ஹாரிகவுடரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கறிஞர் பொப்ளி, ஊர் பெரியவர்கள் பி ராஜு, எச். ராமதாஸ், எம் ராமலிங்கம், எம் சந்திரன், மகளிர் சார்பில் பொன்னி, அருணா ஆகியோர் பேசினார்கள்.
திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிட மரபினத்தின் பூர்வீக குடிகளான நீலகிரி மலை மாவட்ட படுகர் இன மக்கள் தங்களின் செம்மாந்த, கலாச்சார, நாகரிக பண்பாட்டுக்கூறுகளை பேணிக்காத்திட ஆண்டுதோறும் கொண்டாடப்படும் “படுகர் தினத்தில்” அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன் என்றார்.
இயற்கை அழகு மிகுதியாக இருக்கும் அவலாஞ்சி ஏரி, ஊட்டியிலிருந்து மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளது. பரந்து விரிந்த இந்த ஏரியை சுற்றி அடந்த வனம் இருக்கிறது. அவலாஞ்சி ஏரி வளைந்து நெளிந்து காணப்படும். இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் மீன்பிடிக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏரியின் அருகில் கூடாங்கள் அமைந்து தங்கவும் அனுமதி உள்ளது சீறப்பான ஒன்றாகும்.
ஊட்டியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மற்றும் சுன்னத் ஜமாத் பெடரேஷன் மதினா பள்ளி வாசல் நிர்வாகம் இணைந்து ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்காக தடுப்பூசி முகாமை நடத்தின. சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி துவக்கி வைத்தார். அதில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் 35 பெண்கள், 29 ஆண்கள் என 64 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊட்டியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மற்றும் சுன்னத் ஜமாத் பெடரேஷன் மதினா பள்ளி வாசல் நிர்வாகம் இணைந்து ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்காக தடுப்பூசி முகாமை நடத்தின. சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி துவக்கி வைத்தார். அதில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் 35 பெண்கள், 29 ஆண்கள் என 64 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி கடந்த 10ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பெரியவர்களுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.75 நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நுழைவு கட்டணம் அதிகம் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில் நேற்று முதல் பெரியவர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.125 ஆக குறைக்கப்பட்டது.
நீலகிரியில் நடைபெறும் கோடை விழாவை கண்டு மகிழ பல்வேறு பகுதிகளிலிருந்து வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 7ஆம் தேதி முதல் நேற்று மாலை வரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 391 பயணிகளும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 816 வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.