India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <
தேவர்சோலை பேரூராட்சி மச்சிகொல்லி பகுதியில் வசித்து வரும் சுமார் 80 குடும்பங்களின் நிலங்களை வனத்துறை காப்புகாடாக அறிவித்தது. இந்நிலையில், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு இதே பகுதியில் நிரந்தரமாக வாழ்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களுக்கு அரசின் மூலமாக வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரை பேரூர் துணைத் தலைவர் யுனஷ்பாபு தலைமையில் சந்தித்து மனு அளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் யாருக்காவது இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தி உள்ளார். கேரளா மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் வெகுவாக பரவி வருவதால், நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நோய் அறிகுறிகள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட காவல் துறையினர் நாள் தோறும் மாவட்டம் முழுவதும் மக்களின் பாதுகாப்பிற்காக அனைத்து இடங்களில் இரவு ரோந்து செய்கின்றனர். அதன்படி இன்று உதகை நகர, உதகை கிராமிய உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் நகரம் மற்றும் தேவால உட்கோட்டம் இடங்களில் ரோந்து செல்லும் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் கைப்பேசி எண்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கூடலூர் பகுதியில் நெல் அறுவடையின் போது, ‘அறுவடை திருவிழா’ நடைபெறுவது வழக்கம். அதன்படி, இங்கு உள்ள புளியம்பாறை பகவதி அம்மன் மற்றும் ஆயிரம் வில்லி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து பக்தர்களுடன் புளியம் வயல் பகுதிக்கு சென்றனர். அங்கு நெல் அறுவடை செய்து மீண்டும் கோயில் சென்று நெல் கதிருக்கு பூஜை செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், குன்னூர் கோத்தகிரி பகுதியில் மட்டும் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா ரூ.8,000 வீதம் ரூ.2 லட்சமும், வெலிங்டன் பகுதியில் மரம் விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்த தகவல் தெரிவிக்க, மாவட்ட நிர்வாகத்தால் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது:- கட்டணமில்லா தொலைபேசி எண் .1077 மற்றும் 0423 245 0034 & 245 0035 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், 99431 26000 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம்.
குனனுார் 43வது தேயிலை தூள் ஏலத்தில் 21.47 லட்சம் இலை ரகம் 5.82 லட்சம் டஸ்ட் ரகம் என, மொத்தம் 27.29 லட்சம் கிலோவில், 18.69 லட்சம் கிலோ தான் ஏலம் போனது. சராசரி விலை கிலோவிற்கு, 147.85 ரூபாய் என இருந்தது. இலை ரகத்தில் ஆர்த்தோடக்ஸ் ரூ.137.69 சி.டி.சி ரூ.149.66 டஸ்ட் ரகத்தில் ஆர்த்தோடக்ஸ் ரூ.132.73 சி.டி.சி ரூ143.40 எனவும் ஏலம் மூலம் விற்பனையாகி ரூ.27.64 கோடி மொத்த வருவாய் தேயிலை ஏலத்தில் கிடைத்தது.
இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 7ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குந்தா சுற்று வட்டார பகுதிகளில் சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசுவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கிண்ணக்கொரை மஞ்சூர் சாலைகளில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் சாலையோர பகுதிகளில் பல மரங்கள் விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு, சீர்செய்யும் பணிகள் போர்கால அடிப்படையில் முடக்கி விடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.