Thenilgiris

News November 19, 2024

நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

உதகை, கேத்தி, சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 23ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கல்வி தகுதி 8வது வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் படிப்பு ஆகும் . நீலகிரி மாவட்ட நிர்வாகம் , மாவட்ட தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

News November 19, 2024

ஜனாதிபதி நீலகிரிக்கு வருகை: கலெக்டர், எஸ்பி ஆலோசனை

image

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக நவ.27-ம் தேதி தமிழகம் வருகிறார்; நீலகிரியில் தங்குகிறார், இவர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, விமானப்படை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

News November 18, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
2.கோத்தகிரியில் மர்மமான முறையில் 6 குரங்குகள் இறப்பு
3.இட்டக்கல் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
4.உள்ளாட்சி முரசு விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
5.நீலகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவிப்பு

News November 18, 2024

உள்ளாட்சி முரசு விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

உள்ளாட்சி முரசு, உள்ளாட்சி மக்கள் அறக்கட்டளை மற்றும் துப்பறியும் விசாரணை குழுமத்தின் 15 வது ஆண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளை கௌரவிக்கும் விழா நடைபெறவுள்ளது. “தாய்நாட்டின் தன்னலமற்ற தன்னார்வலர் விருது-2024” வரும் 22ஆம் தேதி உதகை பிங்கர் போஸ்ட் புனித சூசையப்பர் தொழிற்பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. விருதுக்கான விண்ணப்பங்களை 21ஆம் தேதி வரை உள்ளாட்சி முரசு அலுவலகத்தில் அனுப்பலாம்.

News November 18, 2024

நீலகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு வரும் 25ம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெறும். கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 30ஆம் தேதியும், மாரி கவுண்டர் நினைவு திருமண மண்டபத்தில் நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவித்துள்ளார்.

News November 18, 2024

நீலகிரியில் அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி

image

நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியுள்ளார். இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறினால் யாரும் நம்ப வேண்டாம். தெரியாத லிங்குகளை தொட கூடாது. குறிப்பாக செல்போனுக்கு வரக்கூடிய ஓடிபி எண்களை யாருக்கும் அனுப்பக்கூடாது. மேலும் காவல் துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

News November 18, 2024

நீலகிரியில் கட்டணம் உயர்வு: குறைந்தது வருவாய்

image

காட்டேரி பூங்காவில் கடந்த காலங்களில் கேமராவுக்கு, 50 ரூபாய்; வீடியோ கேமராவுக்கு, 100 ரூபாய் என இருந்ததால், திருமண புகைப்பட, வீடியோ ஆல்பம் எடுக்க நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து புகைப்படக்காரர்கள் அதிகம் வருகைதந்தனர். ஆனால், சமீபத்தில் திடீரென கேமராக்களுக்கு, ரூ.5000 கட்டணம் வாங்கி பல மடங்கு உயர்த்தியதால் தற்போது கூட்டம் வருவதில்லை. இதனால், தோட்டக்கலை துறைக்கு வருவாயும் குறைந்துள்ளது.

News November 18, 2024

உயிலட்டி நீர்வீழ்ச்சியில் எச்சரிக்கை பலகை

image

நீலகிரி சுற்றுலா வரைபடத்தில் இடம் பிடிக்காத உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ஆபத்தான பாசிபடர்ந்த பாறையில் வழுக்கி விழுந்து, கடந்த காலங்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே தற்போது நீர்வீழ்ச்சி பகுதிக்கு,சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ல கூடாது, என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைபட்டுள்ளது.

News November 17, 2024

நீலகிரி இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் (17.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.

News November 17, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்க்களர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2. குன்னூர் கிளை நூலகம் அருகே மண் சரிவு
3. அருவங்காட்டில் நடிப்பு பயிற்சி பட்டறை நிறைவு நாள் விழா
4. முள்ளிகொர கிறிஸ்து அரசர் ஆலய ஆண்டு விழா
5. அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வாக்குச்சாவடியில் ஆய்வு
6. பழங்குடியின மக்களுக்கு கூட்டுறவுத்துறை மருத்துவ முகாம்