India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று (05.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர், தேனி ஐந்து இடங்களில் உணவுப் பொருள்கள் வழங்கல் சம்பந்தமாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் வருகின்ற 11.11.2024 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கடை எண் மாற்றம் ஆகியவை செய்து பொதுமக்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் நிலவரங்கள் ஆண்டிபட்டி 2.8 மி.மீ, அரண்மனைப்புதூர் 1.6 மி.மீ, வீரபாண்டி 12.4 மி.மீ., பெரியகுளம் 25 மி.மீ., மஞ்சளாறு 13 மி.மீ., சோத்துப்பாறை 36 மி.மீ., போடி 7.2 மி.மீ., உத்தமபாளையம் 1.8 மி.மீ., கூடலுார் 1.2 மி.மீ., பெரியாறு அணை 5.4 மி.மீ., சண்முகநதி அணை 2 மி.மீ., என 8.33 மி.மீ., மழை பதிவானது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரியகுளம், சில்வார்பட்டி ஊராட்சி சமுதாய கூடத்தில் நாளை(நவ.6) தொழிலாளர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ஆன்லைன் பொருட்கள், உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் நவ.8 முதல் 21 வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8 இடங்களில் மாற்றத்திறனாளி மாணவர்களுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமில் அரசு மருத்துவமனையில் இருந்து முடநீக்கியல், மனநலம், குழந்தைகள் நலம், காது மூக்கு தொண்டை, கண், நரம்பியல் டாக்டர்கள் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தேனி, போடி, பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். எதிர்பாராத மழை, வெள்ளம், காற்றினால் நெற்பயிர் பாதிக்கப்பட்டாலும், காப்பீடு செய்திருந்தால் இழப்பீடு பெற இயலும். எனவே நெல் சாகுபடி செய்துள்ள தேனி மாவட்ட விவசாயிகள் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்து பயனடையுமாறு வேளாண் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் நேற்று(நவ.4) தேனி-குன்னூர் வைகை ஆற்றுப் பாலம் அருகே ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது போடியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் வந்ததைக் கண்ட அவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவர் மீது ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து இரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தெலுங்கு இன சமுதாயத்தை தரம்தாழ்ந்த வார்த்தைகளால் அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது அல்லிநகரம் காவல் நிலையத்தில் தேனி நாயுடு மகாஜன சங்கத்தின் உறுப்பினரும், அல்லிநகரம் 5வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான S.கிருஷ்ணபிரபா அய்யப்பன் புகார் மனு அளித்தார். உடன் Gr.அய்யப்பன் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வீட்டு வசதி சங்கத்தலைவர் மற்றும் நாயுடு இனமக்கள் இருந்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்று(நவ.4) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் இரண்டே நாட்களில் 3 அடிக்கு மேல் உயர்ந்து 63.45 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 2,862 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் 69 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.