India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் வரும் நவ.15 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதனால் தேனி மாவட்டத்தில் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொடுவிலார்பட்டி தனியார் கல்லூரி அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இதில் அப்பகுதியைச்சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஏ.டி.எம். நிறுவன மேலாளர் மகேஷ்குமார் அளித்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று(நவ.10) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து நேற்று(நவ.10) தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதை முன்னிட்டு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆற்றில் இறங்குவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 10.11.2024 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
போடியில் வெளிநாடு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை கடலூரைச் சேர்ந்த ராமலிங்கம், அவரது மனைவி மகேஸ்வரி நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் சுமங்கலி பிரியா என்பவர் ரூ.72.87 லட்சத்தை கட்டிய நிலையில் நிறுவனத்தினர் மோசடி செய்ததாக எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் ராமலிங்கம், மகேஸ்வரி, முகமது அசாருதீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து மகேஸ்வரியை நேற்று(நவ.09) கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்று (09.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை இரண்டு கட்டங்களாக நடத்திட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்திலுள்ள 1226 வாக்குச்சாவடிகளில் 16.11.2024, 17.11.2024 ஆகிய தேதிகளில் முதற்கட்ட சிறப்பு முகாம் மற்றும் 23.11.2024 24.11.2024 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்காக தனித்துவமிக்க அடையாளச்சீட்டு வழங்குவதற்காக மருத்துவ முகாம் நவம்பர் 12ஆம் தேதி கோட்டூர் அரசு மருத்துவமனையிலும், நவம்பர் 14ஆம் தேதி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையிலும், நவம்பர் 16ஆம் தேதி கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சஜீவனா தெரிவித்துள்ளார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுய தொழில் செய்ய ஒரு பயனாளிக்கு ரூ.50000 மானியம் வழங்கப்படவுள்ளது. தகுதியான பெண்கள் <
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு இன்று(நவ.09) தேனி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் வளாகத்தில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வில் பங்கேற்க காலையில் 671 பேருக்கும் மாலையில் 301 பேருக்கும் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.