Theni

News May 18, 2024

தேனி சுருளி அருவி சிறப்புகள்

image

தேனி, கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. 40 அடி உயரத்திலிருந்து விழும் இந்த அருவி, ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை இதன் சீசனாக இருக்கிறது. இதன் அருகில் சுருளியாண்டவர் கோயில் அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் இவ்வருவி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கீழ்ச் சுருளி, மேல்ச்சுருளி என இரு இடங்கள் உள்ளன. இங்கு இமயகிரிச் சித்தர் தவம் ஆற்றியதாகவும் கூறப்படுகிறது.

News May 18, 2024

தேனி: குடிநீரை  காய்ச்சி குடிங்க

image

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கூடலுார், கம்பம், குமுளி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. லோயர்கேம்பில் தொடங்கும் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் கலங்கிய நிலையில் ஓடுகிறது. கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்பட்டாலும்,  கலங்கிய நிலையிலேயே குடிநீர் சப்ளையாகிறது . இதனால், தொற்று நோய் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

News May 18, 2024

தேனி: 43 இடங்களில் 66 முகாம்கள்

image

தேனி மாவட்டத்தில் மே.20ஆம் தேதி அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளம், மண் சரிவால் பாதிக்கப்பட கூடிய 43 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தால் பொதுமக்களை தங்க வைக்க தாலுகா வாரியாக தேனி 5, பெரியகுளம் 7, ஆண்டிப்பட்டி 13, உத்தமபாளையம் 9, போடி 9 என மொத்தம் 43 இடங்களில் 66 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News May 18, 2024

மின் உற்பத்தி பாதிப்பு – அவதி

image

மின் உற்பத்தி செய்யும் இடமான லோயர்கேம்பில் அடிக்கடி பல மணி நேரம் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. எனவே மக்கள் அவதி அடைந்துள்ளனர். மின்வாரிய குடியிருப்பு, குடிநீர் திட்ட பம்பிங் ஸ்டேஷனில் மட்டும் மின்தடை ஏற்படவில்லை. காலனி கார் நிலையதெரு ஆகிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மின்தடை அதிகமாக ஏற்படுகிறது. குள்ளப்பகவுண்டன்பட்டி மினி பவர் கவுசில் இருந்து லோயர்கேம்பிற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

News May 18, 2024

தேனியில் பரவும் டெங்கு – அதிகாரிகள் நடவடிக்கை

image

தேனி மாவட்டம் கூடலுாரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 மாதங்களாக நிலவி வந்த கடுமையான வெப்பத்திற்கு பின் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட சீதோசன நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.  ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுக்கும் அணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News May 18, 2024

பெரியகுளம்: தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

image

திருச்சியில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பெரியகுளம் மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.
பெரியகுளம் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமியில் மாஸ்டர் ரமேஷிடம் வில்வித்தை பயிற்சி பெற்ற மாணவர்கள் நேதீஷ் குமார் பிரித்தீஷ் குமார் ஆகியோர் திருச்சி துறையூரில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்றனர். இருவரும் முதலிடம் பெற்று தங்க பதக்கங்களை வென்று பாராட்டு பெற்றனர்.

News May 18, 2024

உயிரிழந்தவரின் உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு

image

கூடலூரை சோ்ந்த கிருஷ்ணகுமாா் கடந்த மே.15ஆம் அப்பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தின் முள் வேலியிலிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதனையடுத்து இவரது உறவினா்கள் தோட்ட உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உடலை 3-வது நாளாக நேற்று வாங்க மறுத்தனா். இதுகுறித்து போலீசார் தோட்ட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News May 17, 2024

அருவி போல் நீர் கொட்டும் அணைப்பிள்ளையார் அணை

image

போடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து பங்காரு சாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது. போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை அருவி போல் நீர்க்கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 17, 2024

தேனி: நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தேனியில் கனமழை முதல் மிககனமழைக்கு பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

தேனி: மழைக்கு வாய்ப்பு!

image

தேனி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தேனியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.