Theni

News November 8, 2024

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தது

image

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக நவம்பர் 6 அன்று அணையின் நீர்மட்டம் 125 அடியை எட்டியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின்றி 1346 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று(நவ.07) வினாடிக்கு 751 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 124.90 அடியாக காணப்பட்டது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் சாகுபடிக்காக 1100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

தேனியில் ஆதார் மையம் நவ.10 அன்று செயல்படும்

image

தேனி மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் மையம் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மாவட்டத்தில் ஏதாவது ஒரு நிரந்தர ஆதார் மையம் செயல்படும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவ.10 அன்று தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் செயல்படும் எனவும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News November 8, 2024

10 நாளைக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருவதால் மக்கள் அவதி

image

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி 9வது வார்டு ஆர்.எஸ்.புரம் தெருவில் பத்து நாளைக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங்குவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News November 8, 2024

ராமக்கல் மெட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

image

கம்பம் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு இயற்கை எழில் கொஞ்சும் சிறந்த சுற்றுலா தலமாகும். அங்கிருந்து பார்த்தால் தேவாரம், கோம்பை போன்ற பகுதிகள் நம் கண்களுக்கு விருந்தளிக்கும். சுற்றுலா வரும் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கு போட்டு விட்டு செல்வதால் வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது கலெக்டர் பேச்சுவார்த்தைக்குப் பின் சுற்றுலாவுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

News November 7, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று (07.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 7, 2024

இரங்கல் தெரிவித்த முன்னாள் முதல்வர்

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், உள்துறை செயலாளர், தொழிலாளர் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், என பல்வேறு பதவிகளை வகித்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கே. மலைச்சாமி நேற்று இயற்கை எய்தினார். இதையடுத்து, “அவரது மறைவு செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவிக்கிறேன்” என ஓ.பன்னீர் செல்வம் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

கமல்ஹாசனுக்கு தேனி முன்னாள் எம்பி வாழ்த்து

image

திரையுலகின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவருமானகமல்ஹாசன் இன்று 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து,“அவர் நீண்ட ஆயுளோடு மென்மேலும் மக்கள் பணியாற்ற வேண்டும்; திரை உலகிலும் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்” என தேனி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

தேனி வைகை அணையின் இன்றைய நிலவரம்

image

தேனிமாவட்டம் வைகை அணையின் இன்றைய நிலவரம். அணையின் மொத்த உயரம் 71 அடி; தற்போதைய நீர்மட்டம் 64.76 அடி; அணையின் மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன அடி; அணையின் தற்போதைய கொள்ளளவு 4579 மில்லியன் கன அடி; அணைக்கு நீர்வரத்து 1482 கன அடி; அணையிலிருந்து 1199 கன அடி நீரானது வெளியேற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2024

ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு; இன்றே கடைசி நாள்!

image

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இன்ற(நவ.7) மாலை 5.45 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேனியில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். *SHARE

News November 6, 2024

ஆண்டிபட்டி அருகே வைகை அணை நீர்மட்டம் உயர்வு

image

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 64.67 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1199 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர் வரத்தாக 2072 கனஅடியாக உள்ளது.