India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமான அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ முகாம் போடி சின்னமனூர் மற்றும் உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் அரசு மருத்துவமனையில் நவ.19ஆம் தேதி போடி அரசு மருத்துவமனையிலும் நவ.21ஆம் தேதி சின்னமனூர் அரசு மருத்துவமனை நவ.23ஆம் தேதி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்றும், இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியத்தேர்தல் ஆணையம், நவ.16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. தேனி மக்கள் தங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாமில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்
தேனி மாவட்டத்தில் இன்று (16.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த முருகன். அப்பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இன்று முருகன் அப்பகுதியில் இருந்தபோது, முன்விரோதத்தை மனதில் வைத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரும்பு சோகையினை தீ வைத்து எரிப்பதை தடுக்க அதனை தூளாக்கிட ஹெக்டேருக்கு 50% அல்லது ரூ.2,000 மானியமும், நிழல்வலைக்கூடம் அமைத்து CO18009 (புன்னகை) என்ற இரகம் மற்றும் பிற புதிய இரகநாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்திட நிழல்வலைக்கூடம் அமைக்க 50% அல்லது ரூ.1.30 லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது என ஆட்சியர் தகவல்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சிராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலியாகினர் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துவதாகவும் உயிரிழந்த குழந்தைகளை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளம் எண்.48-இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் 25.11.2024-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிட வேண்டும் என்றார்.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் மண்புழு உரப்படுக்கைகள் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1896 மெட்ரிக் டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 354 மெட்ரிக் டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 664 மெட்ரிக் டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 2177 மெட்ரிக் டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 120 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நெல் விதை 47 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 6 மெட்ரிக் டன்னும்,பயறு வகை விதைகள் (தட்டை பயிறு, பச்சை பயிறு மற்றும் உளுந்து) 22 மெட்ரிக் டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் (நிலக்கடலை மற்றும் எள்) 8.6 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல்.
Sorry, no posts matched your criteria.