Theni

News November 21, 2024

பாலியல் தொல்லை அளித்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை

image

போடியைச் சார்ந்த ஆண்டிவேல் மனைவி ஆனந்தியுடன் வசித்து வந்தார். கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தனியாக இருந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து ஆண்டிவேல் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஆண்டிவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2024

தேனி: ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்

image

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து வரும் பக்தர்கள் இருமுடியில் பாலிதீன் பைகள் மற்றும் தேவையற்ற பொருள்களை கொண்டு வந்து ஆங்காங்கு போடுவதை தவிர்க்க வேண்டும். சபரிமலை என்பது 18 மலைகளால் சூழப்பட்டது அதனை பராமரிப்பது பக்தர்களின் கடமையாகும். பம்பை ஆற்றில் சோப்பு போட்டு குளிப்பதும், ஆடைகளை விட்டுச் செல்வதும் மிகவும் தவறு. இவைகளெல்லாம் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

News November 21, 2024

அய்யப்ப பக்தர்களிடம் தேவசம் போர்டு வேண்டுகோள்

image

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து வரும் பக்தர்கள் இருமுடியில் பாலிதீன் பைகள் மற்றும் தேவையற்ற பொருள்களை கொண்டு வந்து ஆங்காங்கு போடுவதை தவிர்க்க வேண்டும். சபரிமலை என்பது 18 மலைகளால் சூழப்பட்டது அதனை பராமரிப்பது பக்தர்களின் கடமையாகும். பம்பை ஆற்றில் சோப்பு போட்டு குளிப்பதும், ஆடைகளை விட்டுச் செல்வதும் மிகவும் தவறு. இவைகளெல்லாம் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

News November 21, 2024

18-ம் படியில் இருந்து அய்யப்பனை தரிசிக்க திட்டம்

image

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 18ம் படி ஏறி வரும் பக்தர்கள் இடப்பக்கமாக திரும்பி மேம்பாலம் ஏறி நீண்ட நேரம் காத்திருந்து சுற்றி வந்து மூலவரை (அய்யப்பன்)தரிசனம் செய்ய வேண்டும். பார்க்க ஒரு சில வினாடி அதுவும் கிடைக்காமலும் போகலாம். 18ம் படி ஏறியவுடன் கொடிமரத்தின் வழியாக பார்த்து சென்று விட முயற்சிக்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றன என்கின்றனர்.

News November 21, 2024

தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 20, 2024

வைகை டேம் தற்போதைய நீர் இருப்பு நிலவரம்

image

தேனி மாவட்டம் வைகை அணை நீர் மட்டம் 71 அடி. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது. கடந்த சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 65 அடியாக இருந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பாசன வசதிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வீதம் கடந்த ஒரு வாரமாக திறந்து விடப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 5 அடி குறைந்து 60 அடியாக குறைந்துள்ளது.

News November 20, 2024

மாற்றுத்திறனாளி அட்டை வழங்க முகாம் – ஆட்சியர்

image

தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்குவதற்கான மருத்துவ முகாம் நாளை (நவ.21) சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. தேவையுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

தேனியில் இலவச போட்டோகிராஃபி பயிற்சி

image

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இலவச போட்டோ & வீடியோ கிராஃபி பயிற்சி வருகின்ற டிச.2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் 30.11.2024 தேதி கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 04546-251578, 9500314193, 9043651202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *பகிரவும்*

News November 20, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் முகாம்

image

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாம் இரண்டு கட்டமாக 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்தார். பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம் போன்ற குறைகள் தெரிவிக்கலாம் என்றார்.

News November 20, 2024

தேனியில் நவ.23ம் தேதி கிராமசபை கூட்டங்கள் – ஆட்சியர் 

image

தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். அன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டமானது, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டமானது அன்று முற்பகல் 11.00 மணியளவில் ஊராட்சி மன்றத்தலைவர்களால் நடத்தப்படுகிறது என்றார்.

error: Content is protected !!