India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கம்பம், மேலக்கூடலுார் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் மற்றும் இவரது நண்பர்கள் நால்வரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சந்திரசேகரன், குமார், அவரது மனைவி பூமகள், உஷாராணி, கவுரிசங்கர் ஆகிய 5 பேர் ரூ.72.25 லட்சம் பெற்று கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கில் தொடர்புடைய பூமகளை நேற்று (டிச.12) கைது செய்தனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தேனி மாவட்டத்தில் கடந்த நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
தேனி மாவட்டத்தில் இன்று 12.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார். சிறுவயதிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் எம்எல்ஏவுமான ஓ.பன்னீர் செல்வம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பல சாதனை படைக்கவும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணி புரிபவர்கள் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற இருக்கிறது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்த மனுவினை வழங்கி பயன் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று (டிச.12) தெரிவித்துள்ளார்.
சனாதனக் கொடுமைகளிலிருந்து மீண்டெழ அடித்தளமிட்ட வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று. தாழ்த்தப்பட்டோர் தெருக்களில் நடப்பதற்குத் தடை விதித்ததற்காக ஆரம்பித்த போராட்டம், இன்று கோவில் கருவறை வரை சென்று அர்ச்சனை செய்யும் அளவிற்கு உரிமைகளைப் பெற்றுள்ளோம். இது தந்தை பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என தேனி எம்.பி தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தென் தமிழக மாவட்டங்களில் நாளை (டிச.13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து வரும் அவர்; சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று(டிச.12) 74வது பிறந்தநாள் காணும், தமிழ் திரையுலகில் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள மக்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு மேலும் அவர்கள் நீண்ட ஆயுளோடு திரையுலகில் பல சாதனைகளை படைக்க வேண்டும் என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
தேனி: குறிப்பிட்ட ஜாதி, இனத்தை சேர்ந்தவர்கள் பிற ஜாதி, இனத்தை சோ்ந்தவா்களையோ, அவா்களது உடமைகளையோ ஜாதி, வகுப்பு கலவரத்தின் போது அல்லது வன்முறை சம்பவங்களின் போது காப்பாற்றியது வெளிப்படையாக தெரிந்தால் அவர்களை பாராட்டும் வகையில் அரசு சாா்பில் கபீா் புரோஸ்காா் விருது வழங்கப்படுகிறது. இதனை பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் மூலம் வரும் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்
தேனியில் இரயில்வே மீட்டர் கேஜ் பாதையாக இருந்த பொழுது தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே ரயில்வே பிளாட்பாரம் அமைக்கப்பட்டிருந்தது. அகல ரயில்பாதை பணியில் அந்த பிளாட்பாரம் அகற்றப்பட்டது. பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில் தற்பொழுது தெற்கு ரயில்வே நிர்வாகம் இங்கு மீண்டும் பிளாட்பாரம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்கான பணி 2025 மார்ச் மாதம் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.