Theni

News November 9, 2024

தேனி வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை இரண்டு கட்டங்களாக நடத்திட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்திலுள்ள 1226 வாக்குச்சாவடிகளில் 16.11.2024, 17.11.2024 ஆகிய தேதிகளில் முதற்கட்ட சிறப்பு முகாம் மற்றும் 23.11.2024 24.11.2024 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

தேனி மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்காக தனித்துவமிக்க அடையாளச்சீட்டு வழங்குவதற்காக மருத்துவ முகாம் நவம்பர் 12ஆம் தேதி கோட்டூர் அரசு மருத்துவமனையிலும், நவம்பர் 14ஆம் தேதி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையிலும், நவம்பர் 16ஆம் தேதி கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

தேனி ஆதரவற்ற பெண்களுக்கு மானியம் அறிவிப்பு

image

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுய தொழில் செய்ய ஒரு பயனாளிக்கு ரூ.50000 மானியம் வழங்கப்படவுள்ளது. தகுதியான பெண்கள் <>https://theni.nic.in/<<>> என்ற இணையத்தில் 07.12.2024 -க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். SHARE IT

News November 9, 2024

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 972 பேர் பங்கேற்க அனுமதி

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு இன்று(நவ.09) தேனி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் வளாகத்தில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வில் பங்கேற்க காலையில் 671 பேருக்கும் மாலையில் 301 பேருக்கும் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளன.

News November 9, 2024

பாலியல் தொந்தரவு; 3 சிறுவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

image

போடி தாலுகாவை சேர்ந்த 30 வயது பெண் தேனி அரசு விடுதியில் தங்கி 5ம் வகுப்பு படிக்கும் தனது 10 வயது மகனுக்கு அதே விடுதியில் தங்கியிருக்கும் 8ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன், 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது, 13 வயது மாணவன் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததாக தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து (நவ.8) 3 சிறுவர்களையும் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

News November 9, 2024

இன்று ரேஷன்தாரர்கள் குறைதீர் கூட்டம்

image

தேனி மாவட்டத்தில் புது நினைவு திட்டத்தின் கீழ் வட்ட அளவிலான குறைதீர் கூட்டம் இன்று(நவ.09) பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம், தேனி தாலுகா அரண்மனை புதூர், ஆண்டின்படி தாலுகா கொத்தப்பட்டி, போடி தாலுகா திம்மி நாயக்கன்பட்டி, உத்தமபாளையம் தாலுகா அம்மாபட்டி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

தேனி-இடுக்கி கலெக்டர்கள் ஆலோசனை

image

கம்பம் அருகே உள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேக்கடியில் வருகிற 12ந் தேதி பகல் 12 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி ஆகியோர் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து பேச விருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் இரு மாவட்ட அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள்.

News November 8, 2024

தேனி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று(நவ.8) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

போக்சோ குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

image

தேனி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கடந்த 2023-ம் ஆண்டு தனது மகளான சிறுமிக்கு தனது கணவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று குற்றவாளி சரவணனுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

News November 8, 2024

தேனியில் வகுப்பறை கட்டங்களை திறந்து வைத்த முதல்வர்

image

பள்ளிக்கல்வித் துறை சார்பில் தேனி மாவட்டம் ராசிங்காபுரம், அப்பிப்பட்டி, லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.275.88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களை இன்று(நவ.8) முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து நடைப்பெற்ற நிகழ்வில் தேனி ஆட்சியர் ஷஜீவனா, கம்பம் MLA ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கேற்றினர்.