India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளும் 10 பெண்கள் தினமும் இறக்கின்றனர். எனவே தேனி மாவட்டத்தில் கருத்தடை மருந்துகளை, கருத்தடை செய்வதற்கான தகுதி பெற்ற டாக்டர்களின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமல் கருத்தடை மருந்துகளை விற்பனை செய்ய கூடாது. மீறி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து 20 கி.மீ தூரம் செல்லும் போடி மெட்டு மலைச்சாலையில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இச்சாலையில் மழை காலங்கள் இல்லாத போதும் அடிக்கடி மண் மற்றும் பாறைகள் சரிவுகள் ஏற்படுகின்றன. இதனால் அபாயகரமான பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் நடைபயிற்சி, இருசக்கர வாகனத்தில் பயணிப்பதும் உட்பட பல கட்டுப்பாடுகள் வனத்துறை விதித்துள்ளது.
வீரபாண்டியை சோ்ந்தவா் சுப்புராஜ் (60). இவரது மகன் பூவேந்திரராஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாக பூவேந்திரராஜாவின் தந்தை சுப்புராஜுடன் கணேசன், வாக்குவாதம் செய்து அவரை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீரபாண்டி போலீசார் கணேசனை நேற்று (டிச.21) கைது செய்தனர்.
ஆண்டிபட்டி, ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் சுந்தர். இவரிடம் அறிமுகமான வீரன் என்பவர் தனக்கு தெரிந்தவரிடம் தங்க பிஸ்கட் இருப்பதாகவும் அதனை வாங்கி புதிய மாடலில் நகை செய்து தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய சுந்தர் ரூ.74.75 லட்சத்தை பல தவணைகளில் 5 பேரிடம் வழங்கிய நிலையில் அவர்கள் ஏமாற்றினர். இதுகுறித்த புகாரில் குற்றப்பிரிவு போலீசார் ரேவதி, பூமிகா, வீரன் உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று (டிச.21) வழக்கு பதிவு
தேனி மாவட்டத்தில் இன்று 21.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீரழித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசுக்கு கடும் கண்டனம் என போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (டிச.21) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் கவுரி. இவருக்கும் வருசநாட்டைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பின்னர் கவுரி 2ஆம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று மாலை தேனி க.விலக்கு மருத்துவமனைக்கு கவுரி வந்துள்ளார். அதனை பார்த்த ஈஸ்வரன் கவுரியை அரிவாளால் தாக்க முயன்றார். அதில் கவுரி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கம்பம் பகுதியை சேர்ந்த பிரபு உள்ளிட்ட 5 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சந்திரசேகர், குமார், அவரது மனைவி பூமகள், உஷாராணி, கவுரிசங்கர் ஆகிய 5 பேர் ரூ.72.25 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தராமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்த புகாரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் பூமகளை டிச.12.ல் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி போலீசார் குமார் என்பவரை நேற்று கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை ஜெயோசிலின். சில நாட்களாக மாணவிகள் வளையல், பொட்டு, பூவுடன் பள்ளிக்கு வருவதற்கு தலைமை ஆசிரியை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.இதுகுறித்து மாணவிகள் சிலர் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் சிலர் நேற்று மதியம் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் இன்று (டிச.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.