Theni

News December 25, 2024

30 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(60). இவர் தனது மகன் கணேஷ்குமார் என்பவருக்கு அரசு வேலை பெற்றுதரக்கூறி காரைக்குடியை சந்திரமுரளி, அவரது மனைவி புவனேஸ்வரியிடம் 12 லட்சம் குடுத்த நிலையில், அவர்கள் ஏமாற்றி உள்ளனர். மேலும் அவர்கள் இதே போல் பலரிடம் 30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் மோசடி தம்பதிகள் மீது குற்றப்பிரிவு போலீசார் நேற்று(டிச.24) வழக்கு பதிந்துள்ளனர்.

News December 24, 2024

அங்கன்வாடியில் குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரிப்பு – ஆட்சியர்

image

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் 1065 அங்கன்வாடி மையங்களில் ஆறு மாதம் முதல் 6 வயது வரை உள்ள 53,992 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பல குழந்தைகளுக்கு உடல் எடையும் அதிகரித்துள்ளதாக பெருமிதத்தோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா இன்று (டிச.24) தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

தேனி இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் மாற்றம்

image

தேனி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் இந்து சமய அறநிலையத்துறையின் தேனி ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆய்வாளராக பணியாற்றிய தியாகராஜன் தேனி உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

News December 24, 2024

தேனி எஸ்.பி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

image

தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று (டிச.23) பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண் ஜெயமங்கலத்தை சேர்ந்த சரவணன் மனைவி மகாலட்சுமி எனவும், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதகாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

News December 24, 2024

தேனியில் இரிடியம் விற்பனை என ரூ. 9.5 லட்சம் மோசடி

image

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார். இவரை தேனியை சேர்ந்த குமார் என்பவர் அணுகி இரிடியம் வாங்கி விற்றால் நல்ல லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.9.5 லட்சம் ஏமாற்றி உள்ளார். இதற்கு உடந்தையாக தேனியை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் இருந்துள்ளார். இது குறித்து ஜஸ்டின் ஜெயக்குமார் அளித்த புகாரின் படி குமார், ராஜேஷ் ஆகியோர் மீது நேற்று (டிச.23) போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News December 23, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் 

image

தேனி மாவட்டத்தில் இன்று (டிச.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 23, 2024

மருத்துவ கழிவுகள் கொட்டினால்.. தேனி ஆட்சியர் எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் அண்டை மாநிலங்களிலிருந்து சட்ட விரோதமாக கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகளை திறந்தவெளியில் கொட்ட கூடாது. மேற்படி கொட்டினால் அவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று (டிச.23) தெரிவித்துள்ளார்.

News December 23, 2024

தேனி மாவட்டத்தில் இளநீர் கூடுகளை கொட்டும் கேரளா

image

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதியிலிருந்து இளநீர் கூடு கழிவுகளை லாரியில் கொண்டு வந்து தேனி மாவட்டம் குமுளி அருகே கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நேற்று நெல்லை பகுதியில் இருந்து டன் கணக்கில் மருத்துவ கழிவுகளை அள்ளி சென்று கேரளா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

News December 23, 2024

பித்தளை சொம்பை இரிடியம் என கூறி விற்ற இருவருக்கு வலை வீச்சு

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சதுரங்க வேட்டை பட பாணியில் ரூபாய் ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு இரிடியம் எனக் கூறி பித்தளை சொம்பை வண்ணம் பூசி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது பாதிக்கப்பட்ட நபர்கள் கானா விளக்கு காவல் நிலையத்தில் இன்று (டிச.23) புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் 2 பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

News December 22, 2024

 இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று 22.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இரவில் காவலர்கள் உதவி தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!