India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மேகமலை உள்ளது. மகாராஜா மெட்டு பகுதியில் தற்போது கிருஸ்துமஸ், அரையாண்டு தேர்வு உள்ளிட்ட தொடர் விடுமுறையால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்கு காணப்படும் பசுமையான வயல் வெளிகளையும், தேயிலை தோட்டங்களையும் கண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இந்நிலையில் உலகின் மிகச்சிறந்த பொருளாதார மேதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தேனி அருகே அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஈஸ்வரன் (72) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (டிச.25) குற்றவாளி ஈஸ்வரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
தேனியில் ஊா்க்காவல் படையில் சேருவதற்கு 10ம் வகுப்பில் தோ்ச்சியடைந்த, தோல்வியடைந்த ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவா்கள் தேனி எஸ்.பி அலுவலகம் அருகேயுள்ள தேனி மகளிா் காவல் நிலைய முதல் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊா்க்காவல் படை அலுவலகத்தில் டிச.27, 28 அன்று விண்ணப்பப் படிவம் பெற்று டி.30க்குள் பதிவு செய்ய வேண்டும். ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.560 வழங்கப்படும் என எஸ்பி தெரிவித்துள்ளார்.
ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) பேச்சுப் போட்டி ஜன.08 2025ஆம் நாளன்று (புதன்கிழமை) முற்பகல் 10.00 மணிக்கும், அதே நாளன்று பிற்பகல் 2.00 மணிக்கு கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி வாலாயமான விதிமுறைகளைப் பின்பற்றி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பெறவுள்ளது என்றார்.
தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்காவல்படைக்கு (ஆண்கள் 29 பெண்கள் 3) தகுதி உடையவர்கள் 27, 28.12.2024 தேதிகளில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் தளத்தில் செயல்படும் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேற்று(டிச.26) தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பங்களை 31.12.2024 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களது மொபைலில் நீங்கள் பரிசு வென்று உள்ளீர்கள் என்று வரும் போலியான மெசேஜ்களை நம்பி உங்களுக்கு தெரியாத நபர்களுக்கு ஒரு போதும் பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை அனுப்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று(டிச.26) தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் டிச.30ல் துவங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இலவச பாடக் குறிப்புகளும் வழங்கப்படும்.எனவே தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 63792 68661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களை கொண்டு வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரிலோ அல்லது 63792-68661 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இன்று தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
இயேசுவின் பிறப்பு கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள் என்ற போதனையின் மறு உருவமாக வாழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகள் என தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.