India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக ஷஜீவனா பதவி வகித்து வருகிறார். இவர் ஆட்சிப் பணியில் 13 ஆண்டுகள் பணி முடித்தததினால் அவருக்கு கூடுதல் செயலாளர் நிலையிலான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.இவர் தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பு ஏற்றதில் இருந்து பொது மக்களின் நன்மதிப்பை பெற்றவர் ஆவார்.
பசுமை குடில் அமைத்து அதில் வெள்ளரி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பசுமை குடில் அமைக்க ரூ.16 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. வெள்ளரி 90 நாள் பயிராகும்.45வது நாளில் இருந்து பறிக்கலாம். கிலோ ரூ.15 இருந்து ரூ.45 வரை கிடைக்கிறது என்று கம்பம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வருஷநாடு பகுதியை சேர்ந்த +2 படிக்கும் 17 வயது பள்ளி மாணவி தங்கள் தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது டூவீலரில் சென்ற இருவர் சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பாண்டிசெல்வம், தெய்வேந்திரன், உள்ளிட்ட இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிந்த போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்று (டிச.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்றைய (டிச.29) நிலவரப்படி முல்லை பெரியாறு அணை:128.0 அடியாகவும், வைகை அணை:64.86 அடியாகவும், சோத்துப்பாறை அணை:124.96 அடியாகவும், மஞ்சளார் அணை: 53.70 அடியாகவும், சண்முகநதி அணை:49.60 அடியாகவும் உள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து தகுந்தாற்போல் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. டூவீலரில் செல்வோர் பஸ்களை முந்த முயலும் போது சில நேரங்களில் தவறி பஸ் டயர்களில் விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக அரசின் உத்தரவின் பெயரில் தேனி மாவட்டத்தில் உள்ள 140 அரசு பேருந்துகளில் சேஃப் கார்டுகள் எனக்கூடிய தடிமனான ரப்பராலான பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று (டிச.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்றைய (டிச.28) நிலவரப்படி முல்லை பெரியாறு அணை:128.30 அடியாகவும், வைகை அணை:64.70 அடியாகவும், சோத்துப்பாறை அணை:125.29 அடியாகவும், மஞ்சளார் அணை: 53.90 அடியாகவும், சண்முகநதி அணை:49.90 அடியாகவும் உள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து தகுந்தாற்போல் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் இருந்து வத்தலகுண்டு பகுதிக்கு 10 கிலோமீட்டர் தூரத்தை குறைத்து பயணம் செய்யும் விதமாக நடுகோட்டை – ஏ.வாடிப்பட்டி இடையே உள்ள வைகை ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி திட்டத்தில் ரூ.8.50 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானப் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தேனி மாவட்டத்திற்க்கு இன்று வளர்ச்சி பனிகள் மற்றும் ஆய்வுக்காக வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வேளாண் தோட்டக்கலைத் துறையினர் எட்டு வட்டாரங்களிலும் அமைச்சர் பார்வையிட பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஒரு வாரமாக இரு துறை அதிகாரிகள் இதே வேலையாக டென்ஷனில் இருந்தனர். இந்நிலையில் நேற்று அசை்சர் வருகை திடீரென ரத்தானது.இதனால் அதிகாரிகள் ரிலாக்ஸ் அடைந்துள்ளனர்
Sorry, no posts matched your criteria.