Theni

News January 2, 2025

மது போதையில் பாட்டியை கொன்ற பேரன் கைது

image

உத்தமபாளையம் அருகே கருக்கோடை பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மாள் (80). இவரது மகள் வழிப் பேரன் முத்துச்செல்வன் (26). இவர் மது போதையில் தினமும் பாட்டியுடன் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (டிச.1) வீட்டின் முன்பாக பாட்டியுடன் ஏற்பட்ட தகராறில் பேரன் பேவர் பிளாக் கல்லால் பாட்டியின் தலையில் அடித்துள்ளார். இதில் பாட்டி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா். கோம்பை போலீசார் முத்துச்செல்வனை கைது செய்தனர்.

News January 1, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.01) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 1, 2025

பிக்கப் வாகனம் மோதியதில் தந்தை மகன் இருவர் பலி

image

பெரியகுளம் அருகே உள்ள டி வாடிப்பட்டி பிரிவு பகுதியில் நேற்றிரவு G கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் அவரது மகன் வீரமுத்துகருப்பையா இருவரும் இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் சென்றபோது எதிரில் வந்த பிக்கப் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கீழே விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டு தந்தை மகன் இருவரும் சம்பந்தப்பட்ட இடத்திலே உயிரிழந்தனர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

News December 31, 2024

 இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 31.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 31, 2024

தேனியில் மாரத்தான் போட்டி – ஆட்சியர் தகவல்

image

அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கு உடல் தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடம் புகுத்துவதற்கும் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் தேனி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி ஜனவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

தர்பூசணியில் திருவள்ளுவரை சிலை

image

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இழஞ்செழியன் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா பெருமையைச் சேர்க்கும் விதமாக தர்பூசணியில் திருவள்ளுவரின் திருவுருவைச் செதுக்கி அதில் வள்ளுவம் போற்றுவோம் என வாசகத்தினை எழுதியுள்ளார். இந்த காய்கனி சிற்பம் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

News December 31, 2024

உள்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து 

image

உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (டிச.31) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

ரூ.2.52 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது

image

பெரியகுளத்தை சேர்ந்த சேக்முகமது என்பவர் தான் மற்றும் தனது உறவினர்களிடம் பங்கு வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி தனது அண்ணன் ஹக்கீம், அவருடைய மகன் அகமதுசபீர், மருமகள் சபியாபேகம் ஆகியோர் ரூ.2.52 கோடி மோசடி செய்ததாக தேனி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று (டிச.30) அகமதுசபீரை கைது செய்தனர்.

News December 31, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (30.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 30, 2024

புதுமைப்பெண் திட்டத்தில் 2,371 மாணவிகள் பயன்

image

தேனி மாவட்டத்தில் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மொத்தமாக 10,382 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர். தற்போது புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தின்கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி பயிலும் 2371 மாணவியர்கள் பயன் பெற்றுள்ளதாக இன்று (டிச.30) ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தகவல் தெரிவித்தார்.

error: Content is protected !!