India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட இராசிமலை பகுதியில் வருகின்ற ஜன.08 ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா, அடிப்படை வசதிகள் கோரிக்கையில் அடங்கிய பல்வேறு மனுக்களை அளித்தே பயன்பெறுமாறு இன்று தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். *ஷேர்*
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு காவடி தூக்குவதைவிட, போராடி உயிர்த்தியாகம் செய்வதே மேல் என்று தூக்கு கயிறையும் முத்தமிட்டு உயிர் தியாகம் செய்த பாஞ்சாலங்குறிச்சியின் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன் என தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தேனியில் சுமார் 425919அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
தேனியில் சுமார் 425919அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பாமக மகளிர் அணி சார்பில் சௌம்யா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (ஜன.02) போராட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி காவல் துறையினர் மேற்படி போராட்டத்திற்கு தடை விதித்துள்ளதும், மீறி அறப் போராட்டத்தில் ஈடுபட்ட சௌம்யா அன்புமணி மற்றும் பாமக மகளிர் அணியினரை காவல் துறையினர் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது என போடி எம்எல்ஏ ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் சார்ந்தோருக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற பதினாறு முதல் 36 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வாயிலாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மகன் மற்றும் மகள் கல்விச் சான்றிதழ் ஆவணங்களுடன் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் விருப்பங்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல்.
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றும் அளவுக்கு நிதி நிலைமையை சீரழித்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வரும் போடி எம்எல்ஏ-வுமான ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஜன.02) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை அரசே போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் 2023ஆம் ஆண்டு 166 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 335 பேர். இதேபோல் 2024-ல் 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 533 பேர் என கடந்த 2 ஆண்டுகளில் 399 வழக்குகளில் 868 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உள் இருப்பவர் சீர் மரபினர் நல வாரியத்தில் நல திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை 03.01.2025 நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேவையுள்ளவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.