India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மழைச்சாரல், ஜெகதீஷ் பிராய்லர் மற்றும் நகை அடகு கடை சார்பில் இன்று தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சோசியல் மீடியா பிரபலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பகுதிகளை சேர்ந்த யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த ஜெயபாரதி தற்போது திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தமிழ்நாடு சர்க்கரை கழக பொது மேலாளராக பணியாற்றி வந்த மகாலட்சுமி தேனி மாவட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 09 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாய விலைக்கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயனடைமாறு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று 04.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பிரபல அணு விஞ்ஞானியும், இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் மிக முக்கிய பங்கு வகித்தவருமான விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது என தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மது விலக்கு என்று சொல்லிக் கொண்டு மது வளர்ப்பினை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசிற்கு என முன்னாள் முதல்வரும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் தனது கண்டனத்தை இன்று தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் குடியை ஒழித்து கட்டுவதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேனி முன்னாள் எம்பியும், அமமுக பொதுச்செயலாளருமான டி.டி.வி.தினகரன், தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ தொற்று பரவி வரும் நிலையில் அதற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அனைத்து விதமான அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவும், போதுமான மருத்துவர்களும் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள கணக்காளர் பணியிடம் ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முகவரிக்கு வருகின்ற ஜன.18-க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார்
தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாட்டு பண்ணையம், வெள்ளாடு வளா்ப்பு, நாட்டுக் கோழி வளா்ப்பு ஆகியவை குறித்து 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக் கட்டணமாக ரூ.3,000 செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவா்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 86674 28982 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேனி: குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை ஜன.9 முதல் வழங்கி ஜன.13-க்குள் முழுவதும் கொடுத்து முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று (ஜன.3) ஒரே நாளில் 1 லட்சத்து 74 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது என வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.